நடிகர் திலீப்பை கைது செய்ய தடை

நடிகர் திலீப்பை கைது செய்ய தடை
நடிகர் திலீப்

நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கை விசாரிக்கும் டிஎஸ்பியை கொல்ல சதி திட்டம் தீட்டியதாகத் தொடரப்பட்ட வழக்கில், நடிகர் திலீப்பை வரும் 14-ம் தேதி வரை கைது செய்ய நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பிரபல நடிகை ஒருவர் கடந்த 2017-ம் ஆண்டு காரில் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில், மலையாள நடிகர் திலீப், பல்சர் சுனில் உட்பட சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் திலீப் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்நிலையில், நடிகை பலாத்காரம் செய்யப்பட்டபோது செல்போனில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள், நடிகர் திலீப்பிடம் கொடுக்கப்பட்டதாகவும் அதை அவர் அதிக சத்தத்துடன் பார்த்தது தனக்குத் தெரியும் என்றும் திலீப்பின் நண்பரும் இயக்குநருமான பாலச்சந்திர குமார் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கை விசாரிக்கும் டிஎஸ்பி பைஜு பவுலோசை கொல்ல நடிகர் திலீப், அவர் தம்பி அனூப் உட்பட 6 பேர் சதி திட்டம் தீட்டியதாகவும் பாலச்சந்திரகுமார் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் மீது, ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்தப் புதிய வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி, நடிகர் திலீப் கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு, விசாரணைக்கு நேற்று வந்தது. அப்போது திலீப் சார்பில், விசாரணையை வரும் 17-ம் தேதிக்கு தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்க மறுத்த நீதிமன்றம், 14-ம் தேதி விசாரணை நடைபெறும் என்றும் அதுவரை திலீப்பை கைது செய்யக்கூடாது என்றும் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in