நடிகர் திலீப்புக்கு கோல்டன் விசா!

நடிகர் திலீப்புக்கு கோல்டன் விசா!

பிரபல நடிகர் திலீப்புக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா கொடுத்து கவுரவித்துள்ளது.

ஐக்கிய அமீரக அரசின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை கடந்த சில மாதங்களாக இந்திய நடிகர், நடிகைகளுக்கு கோல்டன் விசாவை வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த விசா வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அமீரக குடிமகன்களாகக் கருதப்படுவார்கள். ஸ்பான்சர்கள் உதவி இன்றி அந்நாட்டில் வாழவும் வேலை செய்யவும் முடியும். பத்து வருடங்களுக்குப் பிறகு விசா தானாகவே புதுபிக்கப்படும்.

நடிகர்கள் சஞ்சய் தத், ஷாருக்கான், மம்முட்டி, மோகன்லால், பிருதிவிராஜ், துல்கர் சல்மான், சுராஜ் வெஞ்சரமூடு, நடிகைகள் ஊர்வசி ரவுத்தலா, மீரா ஜாஸ்மின், அமலாபால், லட்சுமிராய், காஜல் அகர்வால், பிரணிதா, த்ரிஷா, மீனா, ஆண்ட்ரியா, அமலா பால், பாடகி சித்ரா உட்பட பலர் ஏற்கெனவே இந்த விசாவை பெற்றுள்ளனர்.

தமிழ் நடிகர்கள் பார்த்திபன், விஜய்சேதுபதி, சிம்பு, நாசர் உட்பட பலருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டு உள்ளது. இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு சமீபத்தில் இந்த விசா வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரபல மலையாள நடிகர் திலீப்புக்கு இப்போது கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in