புதிய வழக்கில் நடிகர் திலீப் முன்ஜாமீன் கோரி மனு

புதிய வழக்கில் நடிகர் திலீப்   முன்ஜாமீன் கோரி மனு
நடிகர் திலீப்

தன் மீது புதிதாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்ஜாமீன் கோரி, நடிகர் திலீப் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

பிரபல நடிகை ஒருவர், கடந்த 2017-ம் ஆண்டு காரில் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் மலையாள நடிகர் திலீப், பல்சர் சுனில் உட்பட சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் சிறைவாசத்துக்குப் பிறகு, நடிகர் திலீப் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்நிலையில், நடிகை பலாத்காரம் செய்யப்பட்டபோது செல்போனில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள், நடிகர் திலீப்பிடம் கொடுக்கப்பட்டதாகவும் அதை அவர் அதிக சத்தத்துடன் பார்த்தது தனக்குத் தெரியும் என்றும் திலீப்பின் நண்பரும் இயக்குநருமான பாலச்சந்திர குமார் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை விசாரித்த விசாரணை நீதிமன்றம், வரும் 20-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய போலீஸுக்கு அனுமதி அளித்தது. இதையடுத்து டிஎஸ்பி பைஜு பவுலோஸ் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பாலச்சந்திரகுமாரிடம் விசாரணை நடத்தியது.

நடிகர் திலீப்
நடிகர் திலீப்

அப்போது, டிஎஸ்பி பைஜு பவுலோசை லாரி ஏற்றிக் கொல்ல நடிகர் திலீப், அவர் தம்பி அனூப் உட்பட 4 பேர் சதித் திட்டம் தீட்டியதாகத் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் மீது, ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில், நடிகர் திலீப்பிடமும் பாதிக்கப்பட்ட நடிகையிடமும் விரைவில் விசாரணை நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து நடிகை கடத்தப்பட்ட வழக்கு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில், இந்த புதிய வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி, நடிகர் திலீப் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in