வழக்கை ரத்துசெய்யக் கோரி நடிகர் திலீப் மனு

நடிகர் திலீப்
நடிகர் திலீப்

போலீசாரை கொல்ல சதித் திட்டம் தீட்டம் தீட்டியதாக, தன்மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரி நடிகர் திலீப், கேரள உயர் நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார்.

பிரபல மலையாள நடிகை கடந்த 2017-ம் ஆண்டு காரில் கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலையானார். இந்த வழக்கை விசாரிக்கும் டிஎஸ்பி உட்பட போலீஸாரை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாகக் கூறி நடிகர் திலீப், அவர் தம்பி அனூப், திலீப்பின் மைத்துடன் சுராஜ் உட்பட 6 பேர் மீது குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி, திலீப் உட்பட 6 பேரும் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அவர்களுக்கு உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

இந்நிலையில், தன்மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரி நடிகர் திலீப் கேரள உயர் நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘‘போலீஸுக்கு என் மீதுள்ள முன்விரோதம் காரணமாக, என்னை பழிவாங்கும் நோக்கத்தில் போலீஸ் அதிகாரிகளை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாகக் கூறி வழக்குப் பதிவு செய்துள்ளனர். முன்ஜாமீன் மனு மீதான விசாரணையில், சதித்திட்டத்தை நிரூபிக்க, போதுமான ஆதாரங்கள் இல்லை என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதனால், என்மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in