`தனுஷின் வளர்ச்சியைப் பொறுக்காமல் இப்படி செய்வதா?’- ரசிகர்கள் காட்டம்!

`தனுஷின் வளர்ச்சியைப் பொறுக்காமல் இப்படி செய்வதா?’- ரசிகர்கள் காட்டம்!

தனுஷின் வளர்ச்சியை பொறுக்காமல் சிலர் வேண்டுமென்றே அவர் யூடியூப் சேனலை முடக்கியுள்ளதாக, ரசிகர்கள் கூறியுள்ளனர்.

நடிகர் தனுஷ் தமிழ், தெலுங்கு, இந்தி, ஹாலிவுட் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அவர் நடிப்பில் அடுத்து ’திருச்சிற்றம்பலம்’ ரிலீஸ் ஆக இருக்கிறது. இதையடுத்து ’தி கிரே மேன்’, செல்வராகவன் இயக்கத்தில் ’நானே வருவேன்’, வாத்தி உள்ளிட்ட படங்கள் வெளியாக இருக்கின்றன.

இந்நிலையில் வுண்டர்பார் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் தனுஷ், அந்த பெயரில் யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார். இதில், அவருடைய பல ஹிட் பாடல்களையும் பதிவேற்றியுள்ளார்.

தனுஷ், சாய் பல்லவி நடித்து கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம், ’மாரி 2’ . பாலாஜி மோகன் இயக்கிய இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

’ரவுடி பேபி’ பாடலில் தனுஷ், சாய் பல்லவி
’ரவுடி பேபி’ பாடலில் தனுஷ், சாய் பல்லவி

இதில் இடம்பெற்ற ’ரவுடி பேபி’ பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்திருந்தார். சூப்பர் ஹிட்டான இந்தப் பாடல் யூடியூப்-பில் அதிகமானோர் பார்த்த பாடலாக, சுமார் 120 கோடி பார்வைகளை பெற்ற தென்னிந்திய பாடலாக, சாதனைப் படைத்தது. இந்நிலையில், இந்தப் பாடல் இடம் பெற்றிருந்த வுண்டர்பார் பிலிம்ஸ் யூடியூப் சேனல் திடீரென முடக்கப்பட்டுள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ரவுடி பேபி பாடலில் தனுஷ், சாய் பல்லவி
ரவுடி பேபி பாடலில் தனுஷ், சாய் பல்லவி

’தனுஷின் வளர்ச்சியைப் பொறுக்காத சிலர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளனர், இது கடும் கண்டனத்திற்குரியது’ என்று அவர் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். சில ரசிகர்கள், விரைவில் யூடியூப் சேனல் மீட்கப்பட்டுவிடும்’ என்றும் தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே, நடிகரும் இசை அமைப்பாளருமான ஹிப் ஹாப் தமிழா ஆதியின் யூடியூப் சேனலும் முடக்கப்பட்டது. பின்னர் அது மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in