படிப்புங்கறது பிரசாதம் மாதிரி கொடுங்க, பைவ் ஸ்டார் ஓட்டல் சாப்பாடு மாதிரி விற்காதீங்க: அரசியல் பேசும் தனுஷின் 'வாத்தி'

படிப்புங்கறது பிரசாதம் மாதிரி கொடுங்க, பைவ் ஸ்டார் ஓட்டல் சாப்பாடு மாதிரி விற்காதீங்க: அரசியல் பேசும் தனுஷின் 'வாத்தி'

தனுஷ் நடிக்கும் ’வாத்தி’ படத்தின் டீஸர் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் 'வாத்தி' படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இந்தப் படம் தெலுங்கில் 'சார்' என்ற பெயரில் உருவாகிறது. வெங்கி அட்லூரி இயக்கும் இந்தப் படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் நாக வம்சி தயாரிக்கிறார். தனுஷ் ஜோடியாக, சம்யுக்தா மேனன் நடிக்கிறார். சமுத்திரக்கனி, தணிகலபரணி உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

'வாத்தி' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியான நிலையில், அவருடைய 40 வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று டீஸர் வெளியாகி இருக்கிறது. கல்வி வியாபாரமானதை கேள்வி கேட்கும் படமாக இதன் டீசர் இருக்கிறது. அதில் தனுஷ், படிப்புங்கறது பிரசாதம் மாதிரி, கொடுங்க. பைவ் ஸ்டார் ஓட்டல் சாப்பாடு மாதிரி விற்காதீங்க’ என்று பேசும் வசனத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

டீசரில் பாரதியார் போல வேடமணிந்தும் அவர் ஆக்‌ஷன் அவதாரம் காட்டுகிறார். இந்த டீசர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in