தனுஷின் 'வாத்தி' வெளியீடு தள்ளிப்போகிறதா?

தனுஷின் 'வாத்தி' வெளியீடு தள்ளிப்போகிறதா?

நடிகர் தனுஷின் ‘வாத்தி’ திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப் போக வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

‘திருச்சிற்றம்பலம்’ வெற்றிக்குப் பிறகு நடிகர் தனுஷின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் திரைப்படம் ‘வாத்தி’. தமிழ்- தெலுங்கு என பைலிங்குவலாக உருவாகி வரும் இந்தப் படத்தை வெங்கி அட்லூரி இயக்கி இருக்கிறார்.

படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் போஸ்ட்- புரொடக்‌ஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. சில கிராஃபிக்ஸ் பணிகள் காரணமாக இந்த போஸ்ட்- புரொடக்‌ஷன் பணிகளுக்கு இன்னும் சில நாட்கள் தேவைப்படும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

இந்த வருடம் டிசம்பர் மாதத்திற்குள் படத்தை வெளியிட படக்குழு எதிர்பார்த்திருந்த நிலையில் போஸ்ட்- புரொடக்‌ஷன் பணிகள் காரணமாக அடுத்த வருடத்திற்கு அதாவது ஜனவரி மாதம் குடியரசு தின விடுமுறை வாரத்தைக் கணக்கில் கொண்டு வெளியிட திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. ’வாத்தி’ திரைப்படத்தில் 1980- ம் ஆண்டு காலக்கட்டத்தில் ஆசியராக வருகிறார் தனுஷ். படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க, படத்தின் கதாநாயகியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார்.

தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in