நடிகர் தனுஷ் படத்தின் ஷோ திடீரென ரத்து: திரையரங்கு கண்ணாடியை உடைத்த ரசிகர்கள்

நடிகர் தனுஷ் படத்தின் ஷோ திடீரென  ரத்து: திரையரங்கு கண்ணாடியை உடைத்த ரசிகர்கள்

நடிகர் தனுஷ் நடித்த 'திருச்சிற்றம்பலம்' திரைப்படக் காட்சி ரத்தானதால் ரசிகர்கள் திரையரங்கின் கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையின் பழமையான திரையங்குகளில் ஆல்பர்ட்டும் ஒன்று. இதில் நடிகர் தனுஷ் நடித்த 'திருச்சிற்றம்பலம்' திரையிடப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 12 மணி காட்சிக்கான டிக்கெட் விற்பனை இணையதளம் வழியாகவும், நேரடியாகவும் நடந்தது. இதனால் படத்தைப் பார்க்க ரசிகர்கள் திரையரங்கில் குவிந்ததிருந்தனர். இந்த நிலையில், திரையரங்கில் உள்ள புரொஜக்டரில் திடீரென தொழிற்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் 12 மணி காட்சி ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் அந்த காட்சி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த ரசிகர்கள் அதிருப்தியில் திரையரங்க நிர்வாகத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ரசிகர்களுள் சிலர் திரையரங்கின் முகப்பு கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து திரையரங்க நிர்வாகிகள் அளித்த தகவலின் அடிப்படையில் அங்கு வந்த எழும்பூர் போலீஸார், ரசிகர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பின்னர் ரசிகர்கள் அனைவரும் சேர்ந்து உடைக்கப்பட்ட கண்ணாடியை சொந்த செலவில் மாற்றித்தருவதாக உறுதியளித்தனர். அதேபோல திரையரங்க நிர்வாகிகளும் ரத்து செய்யப்பட்ட காட்சியின் டிக்கெட்டுக்கு வசூலித்த பணத்தை ரசிகர்களிடம் திருப்பி அளித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. பின்னர் புரொஜெக்டர் பழுது சரிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து அடுத்தடுத்த காட்சிகள் வழக்கம்போல் திரையிடப்படும் என திரையரங்க நிர்வாகிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in