தனுஷ் மகனுக்கு அபராதம்? - காவல்துறை கொடுத்த விளக்கம் இதுதான்!

பைக் ஓட்டக் கற்றுக் கொள்ளும் தனுஷ் மகன்
பைக் ஓட்டக் கற்றுக் கொள்ளும் தனுஷ் மகன்

நடிகர் தனுஷ் மகன் யாத்ரா 18 வயதே நிரம்பாமல் பைக் ஓட்டியதால் சமீபத்தில் சர்ச்சை கிளம்பியது. இதனை அடுத்து இணையத்தில் பலரும் கேள்வி எழுப்பத் தொடங்க தனுஷ் மகனுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. இதுகுறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷ்

பதினெட்டு வயது நிரம்பாத தனுஷின் மூத்த மகன் யாத்ரா பைக் ஓட்டும் புகைப்படம்தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு சர்ச்சையைக் கிளப்பியது. தேனாம்பேட்டை பகுதியில் யாத்ரா விலையுயர்ந்த R15 பைக்கை ஓட்டி பழகியிருக்கிறார். அவருக்கு உதவியாளராக ஒருவர் சொல்லிக் கொடுக்கிறார். அவர் பைக் ஓட்டுவதை ஒருவர் வீடியோ எடுக்க, உதவியாளர் போட்டோ, வீடியோ எடுக்காதீர்கள் என்று கூறியிருக்கிறார்.

இதைப் பார்த்த நெட்டிசன்கள் ‘18 வயதே ஆகவில்லை. அதற்குள் அப்படி பைக் ஓட்ட வேண்டும் என்றால், யாரும் இல்லாத இடத்தில் தான் ஓட்டி பழக வேண்டும். லைசென்ஸ் உரிமை இல்லாமல், ஹெல்மெட் அணியாமல் இந்த பைக்கை ஓட்டி பழகுவது தவறானது. ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் சக வாகன ஓட்டிகளுக்கும் அது சிக்கல்’ என விமர்சனம் செய்துள்ளனர். ஆனால் ஒருசிலரோ, ‘மிகவும் மெதுவாக தெருக்களில் தான் அவர் ஓட்டி பழகுகிறார். கற்றுக்கொள்வது ஒரு தவறா?’ என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

தனுஷ் தனது மகன்களுடன்...
தனுஷ் தனது மகன்களுடன்...

இந்த சர்ச்சைக் கிளம்பியதை அடுத்து தனுஷ் மகன் யாத்ராவுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால், இதுபற்றி பிரபல ஊடகம், சென்னை போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் சுதாகரிடம் கேள்வி எழுப்பியது. அதற்கு பதில் அளித்த சுதாகர் ஐபிஎஸ், "சம்பந்தப்பட்ட வீடியோவில் உள்ள நபர் முக கவசம் அணிந்திருப்பதால் அவர் யார் என்று சரியாக கண்டுபிடிக்க இயலவில்லை. அதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அந்த நபர் யார் என்று கண்டுபிடித்து அபராதம் விதிப்போம்" என்று தெரிவித்தார்.

இதையும் வாசிக்கலாமே...


HBD Nayanthara | சின்னத்திரை தொகுப்பாளர் டூ லேடி சூப்பர் ஸ்டார்! டயானா... நயன்தாராவாக மாறிய கதை!

சோகம்… பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவனின் கால்கள் அகற்றம்!

அதிர்ச்சி… 28 வயது மருத்துவர் மாரடைப்பால் உயிரிழப்பு!

இன்று தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு முகாம்... கையோட ஆதார் எடுத்துட்டு போங்க!

குட்நியூஸ்... எஸ்பிஐ வங்கியில் 8,283 காலிப்பணியிடங்கள்; உடனே விண்ணப்பியுங்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in