நடிகர் தனுஷ் நடிப்பில் ஒருபக்கம் பிஸியாக இருக்க, ஐஸ்வர்யா இயக்கத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில், நடிகர் தனுஷின் மகன் பைக் ஓட்டக் கற்றுக் கொள்ளும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் தனுஷ் மற்றும் ரஜினி மகள் ஐஸ்வர்யா இருவருக்கும் காதல் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த ஒரு வருடமாக தனுஷ்-ஐஸ்வர்யா இருவரும் கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இதனால் இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க பல முயற்சிகள் ரஜினி தரப்பில் எடுக்கப்பட்டாலும் அது பலனிளிக்கவில்லை. ஐஸ்வர்யா தற்போது ரஜினியைப் பார்த்துக் கொள்வது, படங்கள் இயக்குவது என பிஸியாக இருக்கிறார்.
இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்தாலும் இருவரும் தங்களது பிள்ளைகளை நன்றாகவே கவனித்து வருகின்றனர். யாத்ரா, லிங்கா பள்ளிப்படிப்பில் அக்கறை எடுத்துக் கொள்வது, இருவரும் பிள்ளைகளுடன் தனியாக நேரம் செலவிடுவது என இருக்கின்றனர். இந்த நிலையில், இன்னும் பதினெட்டு வயது நிரம்பாத தனுஷின் மூத்த மகன் யாத்ரா பைக் ஓட்டும் புகைப்படம்தான் தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
போயஸ் கார்டனில் யாத்ரா விலையுயர்ந்த R15 பைக்கை ஓட்டி பழகியிருக்கிறார். அவருக்கு உதவியாளராக ஒருவர் சொல்லிக் கொடுக்கிறார். அவர் பைக் ஓட்டுவதை ஒருவர் வீடியோ எடுக்க உதவியாளர் போட்டோ, வீடியோ எடுக்காதீர்கள் என்று கூறியிருக்கிறார்.
இதைப் பார்த்த நெட்டிசன்கள் ‘18 வயதே ஆகவில்லை. அதற்குள் அப்படி பைக் ஓட்ட வேண்டும் என்றால் யாரும் இல்லாத இடத்தில் தான் ஓட்டி பழக வேண்டும். லைசென்ஸ் உரிமை இல்லாமல் இந்த பைக்கை ஓட்டி பழகுவது தவறானது. ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் சக வாகன ஓட்டிகளுக்கும் அது சிக்கல்’ என விமர்சனம் செய்துள்ளனர்..
ஆனால் ஒருசிலரோ, ‘மிகவும் மெதுவாக தெருக்களில் தான் அவர் ஓட்டி பழகுகிறார். கற்றுக்கொள்வது ஒரு தவறா?’ என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
உஷார்; வங்கக்கடலில் நாளை உருவாகும் 'மிதிலி' புயல்: வானிலை மையம் எச்சரிக்கை!
இயக்குநர் மணிவண்ணன் மரணத்திற்கு இதுதான் காரணமா?: 10 ஆண்டுகளுக்குப் பின் வெளியான உண்மை!
'இந்த அரண்மனை வாடகைக்கு விடப்படும்': ஜோத்பூர் இளவரசியின் சுயதொழிலால் கரன்சி மழை!
உத்தரப் பிரதேசத்தில் டெல்லி-சஹர்சா வைசாலி அதிவிரைவு ரயிலில் தீவிபத்து... 19 பேர் காயம்