‘குபேரா’ தனுஷ்
‘குபேரா’ தனுஷ்

குப்பைக் கிடங்கு அருகே 12 மணி நேரம் படப்பிடிப்பு... தனுஷை பாடாய் படுத்திய இயக்குநர்!

’குபேரா’ படப்பிடிப்பிற்காக நடிகர் தனுஷ் கிட்டத்தட்ட 12 மணி நேரம் குப்பை கிடங்குக்கு அருகில் இருந்துள்ளார். இந்தத் தகவல் அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் தற்போது ‘குபேரா’ படத்தில் நடித்து வருகிறார். இதில் ராஷ்மிகா கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழ்- தெலுங்கு என பைலிங்குவலாக உருவாகும் இந்தப் படத்தில் நடிகர் நாகர்ஜூனாவின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. யாசகனாக இருந்து கோடீஸ்வரனாக உயரும் ஒருவரின் கதைதான் ‘குபேரா’.

 'குபேரா'  படப்பிடிப்பில் நடிகர் தனுஷ்
'குபேரா' படப்பிடிப்பில் நடிகர் தனுஷ்

இதில் யாசகனாக நடிக்கிறார் தனுஷ். படம் தொடர்பாக வெளியான போஸ்டர்களில் அடர்ந்த தாடி, தலைமுடி வைத்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு இருக்கிறார் தனுஷ். இப்படியான சூழ்நிலையில்தான் இந்தப் படத்திற்கு தனுஷ் எந்த அளவிற்கு கஷ்டப்பட்டிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, படத்தின் நாயகனான யாசகனின் வாழ்க்கையில் நடக்கும் வலிகளை பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக குப்பை கிடங்குக்கு அருகே முக்கியமான காட்சி ஒன்று படமாக்கப்பட்டு இருக்கிறது. இதைக் கேட்டதும் எந்தவிதமான தயக்கமும் இல்லாமல், அந்த காட்சியை படமாக்க தனுஷ் ஒப்புக்கொண்டாராம்.

’குபேரா’ படப்பூஜையில் நடிகர் தனுஷ்
’குபேரா’ படப்பூஜையில் நடிகர் தனுஷ்

குப்பை கிடங்குக்கு அருகே கிட்டத்தட்ட 12 மணி நேரம் அந்தக் காட்சி படமாக்கப்பட்டு இருக்கிறது. மாஸ்க் கூட அணியாமல் தனுஷ் அந்தக் காட்சியை முகம் சுளிக்காமல் நடித்துக் கொடுத்திருக்கிறார்.

தனது யதார்த்தமான கதை சொல்லலுக்காகப் பெயர் பெற்றவர் இயக்குநர் சேகர் கம்முலா. ’குபேரா’ படத்திலும் அதையே செய்துள்ளார். ’இருந்தாலும் தனுஷை 12 மணி நேரம் குப்பை கிடங்கு அருகில் வைத்து பாடாய் படுத்த வேண்டுமா?’ தனுஷ் ரசிகர்கள் அதிர்ச்சியுடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

பிளஸ் டூ மாணவர்களே... மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!

வாயில் மலத்தை வைத்துக் கொண்டு பேசாதீர்கள்... வைரமுத்துவுக்கு கண்ணதாசன் மகன் எச்சரிக்கை!

குமரியில் பெரும் சோகம்... கடலில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலி!

வெட்டிப்போட்ட சாதி; கைதூக்கி விட்ட கல்வி... சாதித்துக் காட்டிய நாங்குநேரி மாணவர் சின்னதுரை!

பகீர்... முதலைகள் உள்ள கால்வாயில் 6 வயது மகனை வீசிய பெற்றோர்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in