`எதிர்மறை கதாபாத்திரங்களில் நடிப்பது எளிது’- நடிகர் தனுஷ்

`எதிர்மறை கதாபாத்திரங்களில் நடிப்பது எளிது’- நடிகர் தனுஷ்

``எதிர்மறை கதாபாத்திரங்களில் நடிப்பது எனக்கு எளிதான ஒன்று'' என நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.

தமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். தற்போது தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி, ஹாலிவுட் என நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது ரூஸோ சகோதரர்கள் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘தி க்ரேமேன்’ திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது.

இந்த கதையில் நடிகர் தனுஷ் தமிழனாகவே, எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். படம் தொடர்பாக நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர்கள் ரூஸோ சகோதரர்கள் பல ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்திருந்தனர். அதில் நடிகர் தனுஷ் எதிர்மறை கதாபாத்திரத்தில் முதன் முறையாக ஹாலிவுட்டில் அறிமுகமாகும் போது நடிப்பது பற்றி கேட்கப்பட்டு இருக்கிறது. அதற்கு பதிலளித்துள்ள நடிகர் தனுஷ், ’ஒரு நடிகராக எல்லா விதமான கதாபாத்திரங்களும் நடிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம். அதனால், எதிர்மறை கதாபாத்திரங்கள் எனக்கு பிரச்சினை கிடையாது. நீங்கள் நல்லவர் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்றால் நிச்சயம் சில விஷயங்களை பின்பற்ற வேண்டும். தப்பான விஷயங்களை அதில் காட்ட முடியாது.

ஆனால், எதிர்மறை கதாபாத்திரத்தில் அப்படி எந்த ஒரு கண்டிஷனும் கிடையாது. என்ன வேண்டுமானாலும் நீங்கள் செய்யலாம். அதனால், நேர்மறை கதாபாத்திரம் தவிர்த்து எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிப்பது என்பது எனக்கு எளிதான பிடித்த ஒன்று. மேலும் புதிய அனுபவத்தையும் எனக்கு இது கொடுக்கும். அதனால், இதை நான் ஏற்று கொள்வேன். நடிப்பு என்பதே ரசிக்க கூடிய ஒன்று. அதில் நெகட்டிவ், பாசிடிவ் என்று பிரித்து பார்க்க தேவை இல்லை. எல்லா நடிகர்களுக்குமே இது பொருந்தும்’ என பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in