ட்விட்டரில் அதிக ஃபாலோயர்ஸ்: தனுஷ் தான் நம்பர் ஒன்

நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷ்

ட்விட்டரில் நடிகர் தனுஷ் சத்தமில்லாமல் ஒரு சாதனையை செய்திருக்கிறார். தமிழ் நடிகர் நடிகைகளில் அவருக்குத்தான் மிக அதிகமான பின் தொடர்கிறவர்கள்  ட்விட்டரில் இருக்கிறார்கள் என்பதுதான் அந்த சாதனை.

ட்விட்டர் பக்கத்தில் அரசியல்வாதிகள், பிரபலங்கள், நடிகர்,  நடிகைகளை அவர்களது தொண்டர்கள், ரசிகர்கள், அபிமானிகள் பின் தொடர்கிறார்கள்.  அதனால் இந்த பிரபலங்கள் பதிவிடும் ஒவ்வொரு பதிவும் மிக அதிகமான முறை ரீ ட்விட் செய்யப்படும்.  அதற்கு வாதங்கள் பிரதிவாதங்கள் எழுந்து சர்ச்சையை உண்டாக்குவதும் நடக்கும்.  மிக அதிக ஃபாலோயர்ஸ்  அவர்களில் யாருக்கு அதிகம் என்று மறைமுகமான போட்டியே நடக்கும்.

இந்நிலையில் ட்விட்டரில்  நடிகர் தனுஷை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 11 மில்லியனை தாண்டி இருக்கிறது. இதனை அடுத்து கோலிவுட்டில்  அதிக பின் தொடர்கிறவர்களைக்  கொண்டிருக்கும் முதல் நடிகர் தனுஷ் பிடித்திருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக உள்ள நடிகர் என்றால் அது சூர்யா தான். அவரை 8 மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடர்கிறார்கள்.  கமல், ரஜினி, விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் அடுத்தடுத்த இடங்களில்  இருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in