வாய மூடிட்டு இருக்கணும்... இமான்- சிவகார்த்திகேயன் சர்ச்சை குறித்து எச்சரித்த பிரபல சீரியல் நடிகர்!

முதல் மனைவி மற்றும் குழந்தைகளுடன் இமான்
முதல் மனைவி மற்றும் குழந்தைகளுடன் இமான்

விஷயம் தெரியவில்லை என்றால் வாயை மூடிக் கொண்டு இருக்க வேண்டும் என சிவகார்த்திகேயன்- இமான் சர்ச்சையில் இமானை சின்னத்திரை நடிகர் தீபக் எச்சரித்துள்ளார்.

சமீபத்தில் இசையமைப்பாளர் இமான் தன்னுடைய பேட்டி ஒன்றில் நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டதாகவும் இதை அவரிடம் எதிர்பார்க்கவில்லை என்றும் இனிமேல் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பணிபுரிய வாய்ப்பே இல்லை என்றும் கூறியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து இமானின் முன்னாள் மனைவி மோனிகாவும், சிவகார்த்திகேயன் தங்கள் குடும்பத்தை சேர்த்து வைக்க முயற்சித்ததையே இமான் அவ்வாறு கூறியுள்ளார் எனப் பேட்டிக் கொடுத்தார். சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக மோனிகா இவ்வாறு பேசியது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.

நடிகை குட்டி பத்மினியும் தன்னுடைய யூடியூப் சேனலில் இமானுக்கு ஆதரவாகப் பேசி மோனிகா மீது தவறு எனச் சுட்டிக்காட்டினார். இந்த நிலையில் இது தொடர்பாக நடிகர் தீபக் சமீபத்திய பேட்டியில், 'இப்போது எல்லாம் சோஷியல் மீடியாவில் ஒரு விஷயம் வந்தால் பயங்கரமாக வைரல் ஆகி வருகிறது. அது உண்மையா? பொய்யா? என்று ஆராயாமல் பலரும் பல்வேறு விதமான கமெண்ட்களை போட்டு வருகிறார்கள்.

தயவுசெய்து ஒரு விஷயத்தைப் பற்றி தெரிந்தால் பகிருங்கள். இல்லை என்றால் அதை விட்டு விடுங்கள். தேவையில்லாமல் ஒருவருடைய மனதை புண்படுத்த வேண்டாம். உண்மை எது என்று தெரியாமல் தங்களுக்கு தோன்றியதை எல்லாம் பதிவிடாதீர்கள். வாயை மூடிக் கொண்டு இருங்கள்' என்று கூறி இருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in