த்ரிஷா- மன்சூர் அலிகான் விவகாரத்தில் நடிகை த்ரிஷாவுக்கு ஆதரவு தெரிவித்து ‘சூப்பர் ஸ்டார்’ நடிகர் ட்வீட் செய்துள்ளார்.
நடிகை த்ரிஷா குறித்து அவதூறு பரப்பும் விதமாக நடிகர் மன்சூர் அலிகான் பேசியது திரையுலகில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே மன்னிப்புக் கேட்க முடியாது என சொல்லி வரக்கூடிய மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் தென்னிந்திய நடிகர் சங்கமும் மன்சூர் அலிகானுக்குத் தங்களது கண்டனத்தைத் தெரிவித்தது.
இந்த விவகாரம் தொடர்பாக, இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான், தான் தவறே செய்யவில்லை எனவும் தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு எச்சரிக்கை விடுப்பதாகவும் யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது எனவும் அலட்சியமாகப் பேசினார். இந்த விஷயம், பொதுவெளியில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், மன்சூர்-த்ரிஷா விஷயம் குறித்து தெலுங்கில் முன்னணி நடிகரான சிரஞ்சீவி தனது எக்ஸ் பக்கத்தில் ட்வீட் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, ‘நடிகர் மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷாவை மட்டுமல்ல ஒட்டுமொத்த பெண்களையுமே இழிவுப்படுத்தும் விதமாகதான் அப்படி பேசியுள்ளார். இது அருவருக்கத்தக்கதாக உள்ளது. இந்த விஷயத்திற்கு நிச்சயம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் த்ரிஷாவுக்கு மட்டுமல்ல, இதுபோன்ற தகாத வார்த்தைகளை எதிர்கொள்ளும் அத்தனை பெண்களுக்கும் துணை நிற்பேன்’ எனக் கூறியுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
உத்தராகண்ட் சுரங்க விபத்து; 41 தொழிலாளர்களின் நிலை என்ன? வெளியானது வீடியோ
பரபரப்பு.. வைரமுத்துவை மகளிர் ஆணையம் விசாரிக்க வேண்டும்... ஹெச்.ராஜா வலியுறுத்தல்!
இறப்புக்கு முன் நடிகர் மாரிமுத்து வெளியிட்ட வீடியோ... ரசிகர்கள் உருக்கம்!
ரூ.1,760 கோடி பணம், மதுபானம் பறிமுதல்! தேர்தல் ஆணையம் அதிரடி