மகன் ராம்சரண் பற்றி குட்நியூஸ் சொன்ன சிரஞ்சீவி!

மகன் ராம்சரண் பற்றி குட்நியூஸ் சொன்ன சிரஞ்சீவி!

மகன் ராம்சரண் குறித்தான மகிழ்ச்சியான செய்தியை பொதுவெளியில் பகிர்ந்துள்ளார் தந்தை சிரஞ்சீவி.

அடுத்த தலைமுறை நடிகர்களுக்கு ஈடுகொடுத்து, டோலிவுட்டின் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் சிரஞ்சீவி. அண்மையில் ராம்சரண் பெற்ற விருதுகள் தொடர்பாக வெளியுலகுக்கு அறிவித்து மகிழ்ந்த சிரஞ்சீவி, தற்போது விருதுக்கெல்லாம் அப்பாற்பட்ட மகிழ்ச்சியான செய்தி ஒன்றை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

அதில் ‘ஸ்ரீ ஹனுமன் ஜி அவர்களின் ஆசீர்வாதத்துடன் நாங்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிப்பது என்னவென்றால், உபாசனா - ராம்சரண் இருவரும் தங்களுடைய முதல் குழந்தையை எதிர்பார்த்து இருக்கிறார்கள்’ என்ற செய்தியைத் தெரிவித்து இருக்கிறார் சிரஞ்சீவி.

ராம்சரண் - உபாசனா தம்பதிக்கு திருமணமாகி பத்து வருடங்கள் கழித்து குழந்தைப் பேறு வாய்த்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போதைய சிரஞ்சீவி செய்தியால் ரசிகர்களும் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தங்களது வாழ்த்துகளையும் அன்பையும் சிரஞ்சீவி - ராம்சரண் குடும்பத்தாருக்கு தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக ராம்சரண் - உபாசனா இருவருமே தத்தமது துறையில் கவனம் செலுத்த விரும்புவதால் குழந்தை குறித்தான எண்ணம் தற்போது இல்லை என்று தெரிவித்திருந்தனர். சிரஞ்சீவி குடும்பத்திலிருந்து வெளியான இந்த தகவல், அப்போதைக்கு திரையுலகுக்கு அப்பாலும் விவாதத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in