இப்படி செய்தால் தண்ணீர் பிரச்சினை வராது... பெங்களூரு மக்களுக்கு தீர்வு சொல்கிறார் நடிகர் சிரஞ்சீவி!

நடிகர் சிரஞ்சீவி
நடிகர் சிரஞ்சீவி

பெங்களூருவில் நிலவும் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி தனது எக்ஸ் தளத்தில் ஆலோசனைகளை வழங்கியுள்ளது வைரலாகி வருகிறது.

குடிநீர்
குடிநீர்

கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் வரலாறு காணாத குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். பெங்களூரு மாநகரில் நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் வந்து செல்பவர்கள் உட்பட சுமார் 1 கோடியே 40 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் தற்போது குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு நகரில் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வருவதுடன், சமீபகாலமாக மழை பெய்யாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. இதனால் பெங்களூரு நகரில் தண்ணீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. எனவே, தண்ணீர் வீணாவதைத் தடுப்பதுடன், பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன் காவிரி நீரை தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்று ஜல் மண்டல் அறவுறுத்தியுள்ளது. காவிரி நீரைக் கொண்டு வாகங்களைக் கழுவக்கூடாது என்றும், தண்ணீரை தவறாகப் பயன்படுத்துபவர்களுக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், குறைந்த பட்ச அபராதத் தொகை 500 ரூபாய் வசூலிக்கப்படும் என்று பெங்களூரு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் எச்சரித்துள்ளது.

நடிகர் சிரஞ்சீவி
நடிகர் சிரஞ்சீவி

இந்த நிலையில், பெங்களூருவில் நிலவும் தண்ணீர் பிரச்சினை குறித்து மெகா ஸ்டார் சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில் ட்விட் செய்துள்ளார். அதில்," இந்த பதிவு சற்று நீளமாக இருந்தாலும், மிக முக்கியமானது. நாம் அனைவரும் அறிந்தபடி, நீர் மிகவும் விலையுயர்ந்த பொருள். தண்ணீர் தட்டுப்பாடு அன்றாட வாழ்க்கையை கடினமாக்குகிறது.

பெங்களூரில் இன்று தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாளை எங்கு வேண்டுமானாலும் இப்படி ஒரு பிரச்சினை வரலாம். எனவே, தண்ணீரை சேமிக்க உதவும் வீடுகளைக் கட்ட வேண்டும் என்று கூற விரும்புகிறேன். பெங்களூரில் உள்ள எனது பண்ணை வீட்டிற்கு நான் என்ன செய்தேன் என்பதை இங்கே பகிர்கிறேன்.

சிரஞ்சீவி பண்ணை வீட்டில் அமைக்கப்பட்டுள்ள ரீசார்ஜ் கிணறு
சிரஞ்சீவி பண்ணை வீட்டில் அமைக்கப்பட்டுள்ள ரீசார்ஜ் கிணறு

தளம் முழுவதும் 20-36 அடி ஆழமுள்ள ரீசார்ஜ் கிணறுகள் நிறுவப்பட்டுள்ளன. ஒவ்வொரு கிணற்றிலும் ஒரு வடிகட்டி அமைப்பு உள்ளது.

ஒரு துளையிடல் அமைப்பு, அதாவது வெவ்வேறு அளவுகளில் பாறை அடுக்குகள் மற்றும் மணல் அடுக்குகள், நீர் ஊடுருவலை எளிதாக்க உதவுகிறது. நன்றாக ரீசார்ஜ் செய்வதன் மூலம் அதிக தண்ணீரை சேமிக்க முடியும். மேலும் ஆழமான நீரில் வாழும் நீர்வாழ் உயிரினங்களுக்கு உணவளிக்கிறது. பாறையில் உள்ள நுண்துளை அடுக்குகள் வழியாக தண்ணீரை மெதுவாகப் பாய்ச்ச அனுமதிக்கிறது.

இதன் மூலம் மருந்தியல் கலாசாரத்தின் கொள்கைகளையும் நான் நடைமுறைப்படுத்தியுள்ளேன். சுற்றுச்சூழலுக்கு புத்துயிர் அளிக்கும் வட்டக் கோட்பாட்டின் அடிப்படையில் இந்த அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பின் விளைவு தண்ணீர் தேவையைக் குறைப்பதாகும். மண்ணிலிருந்து ஆவியாகும் நீரின் அளவைக் குறைக்க, விழுந்த இலைகள் மற்றும் மரப்பட்டைகளைப் பயன்படுத்தி தோட்டத்தில் தழைக்கூளம் செய்ய வேண்டும். அதை நான் செய்துள்ளேன்.

இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் தண்ணீரை சேமிக்கவும், மழைநீர் சேகரிப்பை மேம்படுத்தவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த வீடுகளைக் கட்டவும் முடியும். அந்தக் காட்சிகளை இங்கே பகிர்கிறேன்,'' என்று பதிவிட்டுள்ளார். அது தொடர்பான புகைப்படங்களையும் அவர் பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...


ராதிகாவுக்கு எதிராக பாஜக நிர்வாகி வேட்புமனு தாக்கல்... விருதுநகரில் வெடித்தது உட்கட்சி பூசல்!

கலங்கிய அண்ணாமலை... கிணறு வெட்ட பூதம் கிளம்பிடுச்சு... மொத்த ஜோலியையும் முடிக்க மெகா திட்டம்!

நான் பேசும்போது எழுந்து போனால் ரத்தம் கக்கி சாவீர்கள்... செல்லூர் ராஜு லகலக!

திடீரென மயங்கிய அமைச்சர் நேரு... பிரச்சாரம் பாதியிலேயே ரத்து... பதறிய தொண்டர்கள்!

சென்னையில் பரபரப்பு... ரயிலில் பண்டல், பண்டலாக கஞ்சா கடத்தி வந்த பெண் பத்திரிகையாளர் கைது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in