நாயகனாக அறிமுகமாகும் நடிகர் சரண்ராஜ் மகன்!

தேவ் சரண்ராஜ்
தேவ் சரண்ராஜ்

நடிகர் சரண்ராஜின் இரண்டாவது மகன், தேவ் சரண்ராஜ் நாயகனாக அறிமுகமாகிறார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி உட்பட பல மொழிகளில் 600-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சரண்ராஜ். நாயகன், குணசித்திரம், வில்லன் என பல கேரக்டரில் தனி முத்திரை பதித்த சரண்ராஜின் மூத்த மகன் தேஜ் சரண்ராஜ் கன்னடப் படங்களில் நடித்து வருகிறார். அவரின் இரண்டாவது மகன் தேவ் இப்போது தமிழில் அறிமுகமாகிறார்.

இந்தப் படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி சரண்ராஜ் இயக்குகிறார். அவர் ஏற்கனவே, 'அண்ணன் தங்கச்சி' என்ற தமிழ்ப் படத்தையும், 'யதார்த்த பிரேம கதா' என்ற கன்னடப் படத்தையும் இயக்கியுள்ளார்.

சுஷ்மிதா, தேவ் சரண்ராஜ், பிரியதர்ஷினி, சரண் ராஜ், ஆதி தேவ்,
சுஷ்மிதா, தேவ் சரண்ராஜ், பிரியதர்ஷினி, சரண் ராஜ், ஆதி தேவ்,

சரண்ராஜின் இரண்டாவது மகன் தேவ், பைலட்டாக பணியாற்றியவர். கோவிட் காலத்தில் பணியை விட்டுவிட்டு, நடிப்புக்கல்லூரியில் பயிற்சி பெற்று நாயகனாக அறிமுகமாகிறார்.

’ஒரு குப்பத்தில் மீனவ இளைஞனுக்கும், மார்வாடி பெண்ணுக்கும் நடக்கும் காதல் கதைதான் படம். இதில் இரண்டு காதல் ஜோடிகள் நடிக்கவுள்ளனர். தேவ் சரண்ராஜ், சுஷ்மிதா சுரேஷ் முதன்மை ஜோடியாகவும் ஆதி தேவ் மற்றும் பிரியதர்ஷினி அருணாசலம் இன்னொரு ஜோடியாகவும் நடிக்கின்றனர்’ என்றார் சரண்ராஜ். ஜனார்தன் ஒளிப்பதிவு செய்கிறார். சோனி ஸ்ரீ புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு, பாலவாக்கத்தில் இன்று பூஜையுடன் தொடங்கியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in