நடிகர் சரண்ராஜ் இயக்கும் படத்தின் டைட்டில் வெளியீடு

நடிகர் சரண்ராஜ் இயக்கும் படத்தின் டைட்டில் வெளியீடு

நடிகர் சரண்ராஜ் இயக்கத்தில் அவரது மகன் ஹீரோவாக நடிக்கும் படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உட்பட பல மொழிகளில் 600-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சரண்ராஜ். சிறு இடைவேளைக்கு பிறகு இயக்குநராக வந்திருக்கிறார். இவர் இயக்கும் படத்துக்கு ’குப்பன்’ என பெயர் வைத்துள்ளார். இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் அவரே எழுதுகிறார். சோனி ஸ்ரீ புரொடக்‌ஷன் பட நிறுவனம் தயாரிக்கிறது.

பைலட்டாக இருந்து, நடிப்பு கல்லூரியில் சிறப்புப் பயிற்சி எடுத்து கொண்ட சரண்ராஜின் இரண்டாவது மகன், தேவ் சரண்ராஜ் இதில் நாயகனாக அறிமுகமாகிறார். இன்னொரு நாயகனாக ஆதி தேவ் அறிமுகமாகிறார். இவர்களுடன் சுஷ்மிதா சுரேஷ், பிரியதர்ஷினி அருணாசலம் நாயகிகளாக அறிமுகமாகிறார்கள். சரண்ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். குப்பத்து மீனவ இளைஞனுக்கும் மார்வாடி பெண்ணுக்கும் நடக்கும் காதல் கதை தான் படம்.

படம் பற்றி சரண்ராஜ் கூறும்போது, ``கடந்த 35 வருஷமா சென்னை பாலவாக்கத்தில இருக்கேன். தினமும் நாயை கூட்டிட்டு கடற்கரை வழியா வாக்கிங் போவதுண்டு. அப்போ, பல பேர் பழக்கமாகி அங்கு அரட்டை அடிச்சுட்டு தான் வீட்டுக்கு வருவேன். அப்படிதான் குப்பன் என்ற மீனவர் பழக்கமானார். ஒரு மீனவரின் கதையை நாம ஏன் எழுத கூடாதுன்னு அப்பதான் தோணுச்சு. எழுதி முடிச்சதும் நண்பர் பெயரையே தலைப்பா வச்சுட்டேன். அதுதான் ’குப்பன்’. அவரும் இதில் சின்ன கேரக்டரில் நடித்துள்ளார்’ என்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in