சிவாஜி, ரஜினி, கமலுடன் நடித்தவர்:  நடிகர் சக்கரவர்த்தி காலமானார்

சிவாஜி, ரஜினி, கமலுடன் நடித்தவர்: நடிகர் சக்கரவர்த்தி காலமானார்

பிரபல குணசித்திர நடிகர் சக்கரவர்த்தி மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 62.

தமிழ்த் திரையுலகில், சிவாஜி, ரஜினி, கமல் என்று பல நடிகர்களுடன் இணைந்து நடித்தவர், சக்கரவர்த்தி. 70 மற்றும் 80 களில் வெளியான, ’ரிஷி மூலம்’, ’ஆறிலிருந்து அறுபதுவரை’, ’முள்ளில்லாத ரோஜா’, தர்மயுத்தம், ’ராஜாதி ராஜா’ உதயகீதம் உட்பட சுமார் 100 படங்களில் குணசித்திர வேடங்களிலும் சில படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார்.

பின்னர் சினிமாவிலிருந்து விலகிய அவர், மும்பையில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்தியில் இருந்து தமிழில் டப் ஆகும் படங்களுக்குப் பின்னணி குரல் கொடுத்து வந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்தது.

மறைந்த சக்கரவர்த்திக்கு லலிதா என்ற மனைவியும், சசிகுமார், அஜய் குமார் என்ற மகன்களும் உள்ளனர். சக்கரவர்த்தியின் மறைவுக்கு திரைத்துறையினர் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.