ஷிவானியைக் கழற்றிவிட்டு புது ஆளுடன் ஜோடி போட்ட பிக் பாஸ் பாலா... யாருன்னு பாருங்க!

ஷிவானியுடன் நடிகர் பாலா
ஷிவானியுடன் நடிகர் பாலா’பிக்பாஸ்’ நிகழ்ச்சியில்...

’பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற பாலாஜி முருகதாஸ் ஹீரோவாக நடித்துள்ள புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் தமிழ் நான்காவது சீசனுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்பதில் தீவிர ஆர்வம் காட்டி வந்தார் பாலாஜி முருகதாஸ். கடந்த சில ஆண்டுகளாக திரைப்படம் ஒன்றில் நடித்து வந்த நிலையில் தற்போது அந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் எல்ஜி ரவிச்சந்திரன் இயக்கத்தில் ’வா வரலாம் வா’ என்ற டைட்டிலில் உருவாகியுள்ள படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார் பாலாஜி முருகதாஸ்.

ஆம்னி பஸ்ஸை மையமாகக் கொண்டு இந்த படத்தின் கதை அமைந்திருக்கும் என்பது டைட்டில் மற்றும் பஸ்ட் லுக்கை பார்த்தாலே தெரிகிறது என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் பாலாவின் முதல் பட போஸ்டர்...
நடிகர் பாலாவின் முதல் பட போஸ்டர்...

பிக்பாஸ் பாலா தனது முதல் படத்தில் ஷிவானியுடன் ஜோடி சேர்வார் என்று பார்த்தால், ஃபர்ஸ்ட் லுக்கில் ரெடின் கிங்ஸ்லீ உடன் ஜோடி சேர்ந்துள்ளார். இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதே பாலாவுக்கு, ஷிவானிக்கும் நட்பு ஏற்பட்டது. நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகும் அவர்கள் நல்ல நட்புடன் இருந்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in