
'லியோ' படத்திற்குப் போட்டியாக நடிகர் பாலகிருஷ்ணாவின் 'பகவந்த் கேசரி' வெளியாக உள்ளது.
பாலகிருஷ்ணா, காஜல் அகர்வால், அர்ஜுன் ராம்பால் மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்கு திரைப்படம் 'பகவந்த் கேசரி'. இத்திரைப்படம் வரும் நாளை (அக்டோபர் 19) தமிழகத்தில் வெளியாகிறது.
பிரபல தெலுங்கு இயக்குநர் அனில் ராவிப்பூடி இயக்கத்தில் உருவாகியுள்ள 'பகவந்த் கேசரி' திரைப்படத்தின் அதிரடி டிரெய்லர் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
நடிகர் விஜயின் 'லியோ' திரைப்படமும் நாளை வெளியாக உள்ளது. தமிழகம் தாண்டி கேரளா, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய மாநிலங்களிலும் நடிகர் விஜய் நடித்த 'லியோ' திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் தமிழகத்தில் வேறு எந்த திரைப்படமும் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில், 'லியோ' படத்திற்கு போட்டியாக பாலகிருஷ்ணாவின் படமும் வெளியாக இருக்கிறது. தமிழகத்தில் பாலகிருஷ்ணாவுக்கும் குறிப்பிட்ட ரசிகர்கள் இருப்பதால் 'லியோ'வுக்கு போட்டியாக இந்த படம் களமிறங்க உள்ளதா என அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
HBD JYOTHIKA | மறக்க முடியாத நாளும்... மறுத்து... பின் கிடைத்த வாய்ப்பும்!
இந்தியாவைத் தோற்கடிச்சா என் கூட டின்னர் சாப்பிடலாம்... சர்ச்சையைக் கிளப்பிய பிரபல நடிகை!
அதிர்ச்சி... இளம் மல்யுத்த வீராங்கனை தற்கொலை!
வரி ஏய்ப்பு புகார்... தமிழகத்தில் 30 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு!
சோகம்... எல்லாமே 2000 ரூபாய் நோட்டுக்கள்... 1.50 லட்சத்தை மாற்ற முடியாமல் தவிக்கும் பெண்மணி!