`நல்லது செய்தால், நல்லது நடக்கும்’: முன்னாள் மனைவி காதல் பற்றி பிரபல நடிகர் கருத்து

அம்ருதா சுரேஷ், கோபி சுந்தர்
அம்ருதா சுரேஷ், கோபி சுந்தர்

தனது முன்னாள் மனைவி, இசை அமைப்பாளரை காதலிப்பது பற்றி பிரபல நடிகர் பரபரப்பான விஷயத்தைத் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் கோபி சுந்தர், தமிழில், யாருடா மகேஷ், தோழா, பெங்களூர் நாட்கள் உள்பட சில படங்களுக்கு இசை அமைத்துள்ளார். மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். இவர், தனது சமூக வலைதள பக்கத்தில், பின்னணி பாடகி அம்ருதா சுரேஷுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். இந்தப் புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அம்ருதா சுரேஷ், கோபி சுந்தர்
அம்ருதா சுரேஷ், கோபி சுந்தர்

ஏற்கெனவே பிரியா என்பவருடன் திருமணமான கோபி சுந்தர், 2010 -ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். பின் பாடகியான அபயா ஹிரன்மயி என்பவருடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் அம்ருதாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். இருவரும் காதலில் விழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில். கோபி சுந்தரின் பிறந்த நாளான இன்று, அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள அம்ருதா சுரேஷ், அவருக்கு காதல் ததும்ப வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். இதனால் இருவரும் காதலில் விழுந்திருப்பது உறுதியாகி இருக்கிறது.

எலிசபெத், பாலா
எலிசபெத், பாலா

அம்ருதா சுரேஷ், நடிகரும் இயக்குநர் சிறுத்தை சிவாவின் சகோதரருமான பாலாவின் முன்னாள் மனைவி. விவாகரத்து பெற்ற பின் நடிகர் பாலா, எலிசெபத் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இதற்கிடையே, கோபிசுந்தர் - அம்ருதா காதல் பற்றி நடிகர் பாலாவிடம் பலர் கருத்து கேட்டுள்ளனர். இதுபற்றி அவர் தனது மனைவி எலிசபெத்துடன் இணைந்து வெளியிட்டுள்ள வீடியோவில் நடிகர் பாலா கூறியிருப்பதாவது:

எல்லோரும் அவர்கள் செய்யும் தவறுக்காகத் தண்டிக்கப்படுவார்கள். நல்லது செய்தால், நல்லது நடக்கும், தீமை செய்தால், தீமைதான் கிடைக்கும். மீடியா உட்பட பலர் அழைத்து கருத்துக் கேட்டிருந்தார்கள். அது என் வாழ்க்கை அல்ல. இவர்தான் என் மனைவி. நான் நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன். புதிய விஷயங்களை நோக்கி நாங்கள் நகர்கிறோம். மற்றவர்களின் வாழ்க்கையை பற்றி கருத்துச் சொல்ல எனக்கு உரிமையில்லை.

இவ்வாறு பாலா கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in