தொடர் உதவிகளால் காதலுக்கு வந்த சிக்கல்... கலக்கத்தில் நடிகர் பாலா?

தொடர் உதவிகளால் காதலுக்கு வந்த சிக்கல்... கலக்கத்தில் நடிகர் பாலா?

கஷ்டப்படுபவர்களுக்கு தொடர்ந்து உதவிகள் செய்து வருவதால் நடிகர் பாலாவின் காதலுக்கு சிக்கல் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தன்னால் முடிந்த உதவிகளை நடிகர் பாலா தொடர்ந்து செய்து வருகிறார். இதற்கு ஒரு பக்கம் பொதுமக்களிடையே இருந்து பாராட்டுக்கள் குவிந்து வந்தாலும், இதுவே அவரது காதலுக்கு வில்லனாக மாறியிருக்கிறது என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள்.

நடிகர் பாலா
நடிகர் பாலா

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கலக்கப் போவது யாரு’, ‘குக் வித் கோமாளி’ போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் நடிகர் பாலா. இவரது நடிப்புத் திறனை தாண்டி, இவர் செய்யும் உதவிகள் இவருக்கு பல தரப்பினரிடமிருந்தும் பாராட்டுகளைப் பெற்றுத் தந்தது.

மலைக்கிராம மக்களுக்கு ஆம்புலன்ஸ், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு பண உதவி, தாம்பரம் அருகே அனகாபுத்தூர் பகுதியில் கர்ப்பிணிகளுக்கு மருத்துவ சேவைக்காக இலவச ஆட்டோ சேவையை வழங்கினார். சமீபத்தில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு மூன்று சக்கர வாகனம், பெட்ரோல் பங்கில் வேலைப் பார்க்கும் இளைஞருக்கு இருசக்கர வாகனம் என பல உதவிகளைத் தொடர்ந்து செய்து வருகிறார்.

பெண்ணுக்கு ஆட்டோ வாங்கிக் கொடுத்து பாலா, ராகவா லாரன்ஸ் உதவி
பெண்ணுக்கு ஆட்டோ வாங்கிக் கொடுத்து பாலா, ராகவா லாரன்ஸ் உதவி

ரசிகர்கள் மட்டுமல்லாது பல பிரபலங்களும் இவரது உதவியை பாராட்டி வருகின்றனர். நடிகர் ராகவா லாரன்ஸூம் சமீபத்தில், ”இனி பாலா செய்யும் நல்ல விஷயத்தில் தன்னுடைய பங்கும் இருக்கும்” எனச் சொன்னார். இப்படி பாலா செய்யும் நல்ல விஷயங்கள் பாராட்டுகளைப் பெற்றாலும் அதுவே அவரது காதலுக்கு வில்லனாக மாறியிருக்கிறது என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

சமீபத்தில் நிகழ்ச்சி மேடை ஒன்றில் தான் ஒரு பெண்ணை காதலித்து வருவதாகவும் விரைவில் அவரைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் எனவும் சொன்னார் பாலா. ஆனால், இப்போது அந்தப் பெண்ணின் பெற்றோர் பாலாவின் இந்த உதவும் மனப்பான்மையால் கலக்கத்தில் இருக்கின்றனராம். அதாவது, ’சினிமாவில் என்னதான் திறமை இருந்தாலும் வாய்ப்புகள் கிடைப்பது நிரந்தரமல்ல.

இதனால், சம்பாதிக்கும் போதே சேர்த்து வைக்காமல் செலவு செய்தால் எதிர்காலம் என்ன ஆவது’ என்று பெண்ணின் பெற்றோர் தயக்கம் காட்டுகிறார்களாம். அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் பாலா. விரைவில் நல்ல செய்தி வரும் என்கிறார்கள் பாலாவின் நண்பர்கள்.

இதையும் வாசிக்கலாமே...    

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்... பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்!

‘ஜப்பான், பிலிப்பைன்ஸில் சுனாமி எச்சரிக்கையால் பரபரப்பு... சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சரிந்தன!

கேளிக்கை விடுதியில் பயங்கர தீ விபத்து... 29 பேர் எரிந்து உயிரிழந்த பரிதாபம்!

வள்ளி கும்மி நடனமாடி வாக்கு சேகரித்த அண்ணாமலை... கோவை பரப்புரையில் குதூகலம்!

தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ரூ.4 கோடி பறிமுதல்... வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in