பிரபல நடிகர் திடீர் மரணம்: திரையுலகம் அதிர்ச்சி

பிரபல நடிகர் திடீர் மரணம்: திரையுலகம் அதிர்ச்சி

மாரடைப்பு காரணமாக, பிரபல நடிகர் மரணமடைந்திருப்பது திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல மலையாள நடிகர் பாபுராஜ் வாழப்பள்ளி (59). திருச்சூர் வாழப்பள்ளியைச் சேர்ந்த இவர் தனது குடும்பத்துடன் கோழிகோட்டில் உள்ள குதுருசால் என்ற பகுதியில் வசித்து வந்தார். நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு வந்த இவர், மலையாளத் திரைப்படங்களிலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார்.

ஆண்ட்ராய்டு குஞ்சப்பன், மாஸ்டர் பீஸ், பிரேக்கிங் நியூஸ், அர்ச்சனா 31 நாட் அவுட், காயங்குளம் கொச்சுன்னி, நந்தனம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

வீட்டில் இருந்த அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, அவர் குடும்பத்தினர் ஓமச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். மாரடைப்பால் அவர் மரணமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மறைந்த பாபுராஜ் வாழப்பள்ளிக்கு சந்தியா என்ற மனைவியும் பிஷால் என்ற மகனும் உள்ளனர்.

பாபுராஜ் வாழப்பள்ளி மறைவை அடுத்து திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in