`மறுமணம் செய்வேன்; ஆனால், 23 வயதுப் பெண்ணை அல்ல'- நடிகர் பப்லு விளக்கம்

`மறுமணம் செய்வேன்; ஆனால், 23 வயதுப் பெண்ணை அல்ல'- நடிகர் பப்லு விளக்கம்

சமீபத்தில் சின்னத்திரை நடிகர் பப்லு தன்னுடைய 56 வது வயதில் 23 வயதுப் பெண்ணை செய்து கொண்டதாக வந்த செய்திகளுக்குத் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.

அதில் தெரிவித்திருப்பதாவது, ‘எனக்கு இரண்டாவதுத் திருமணம் குறித்தான எண்ணம் இருப்பது உண்மைதான். ஆனால், இன்னும் எனக்கு நடக்கவில்லை. எனவே, நான் எப்போது இதுப் பற்றி அதிகாரப்பூர்வமாக சொல்கிறேனோ அப்போது செய்தி வெளியிடுங்கள். சினிமா நட்சத்திரங்கள் என்றாலும் அவர்களுக்கு என்று ஒரு தனிப்பட்ட வாழ்க்கை உள்ளது. அதில் யாரும் தலையிட வேண்டாம்.

மேலும், நான் படப்பிடிப்புத் தளத்தில் இருந்தபோது எனக்குத் தொடர்ச்சியாக வாழ்த்துகள் சொல்லி மெசேஜ் வந்தது. எதோ விருதுக்காகதான் எனக்கு வாழ்த்து செய்தி வந்திருக்கிறதோ என்றுப் பார்த்தால் எனக்கு 23 வயது பெண்ணோடுத் திருமணமே முடிந்து விட்டது என்ற செய்தியை வைரலாக்கி இருக்கிறார்கள். இப்படியான செய்தியை ஏன் போட்டார்கள், எதற்குப் போட்டார்கள் என்றேத் தெரியவில்லை. சினிமா நட்சத்திரங்களின் வாழ்க்கையும் மற்றவர்களின் வாழ்க்கையைப் போலதான். எங்களையும் வாழவிடுங்கள்.

மீடியாவில் இருக்கும் கணவன் - மனைவி செய்யக்கூடிய ஒரு தப்பு என்ன என்றால் தங்களுக்குள் ஒரு பிரச்சினை என்றால் அதை மீடியாவில் கொண்டு வந்து விடுகிறார்கள்.

அதனால், எங்களைப் போன்றவர்களுக்கும் பிரச்சினை ஆகிறது. இதுபோன்ற ஒரு செய்தி போடும்போது சம்பந்தப்பட்டவர்களிடம் ஒரு வார்த்தை உறுதி செய்துவிட்டு போடுங்கள். என்னுடைய பர்சனல் விஷயத்தைக் என்னிடம் கேட்டு விட்டு போடுங்கள். என்னைவிட வயதில் சிறியப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டேன் என்ற செய்தி என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருக்கிறது. இந்த செய்தி குறித்து என்னிடம் உண்மையா பொய்யா எனக் கேட்டவர்களுக்கு இந்தச் செய்தி நிச்சயம் விளக்கத்தைக் கொடுக்கும் என நம்புகிறேன்’ என அந்தப் பதிவில் வேதனையுடன் தெரிவித்து இருக்கிறார் பப்லு.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in