சண்டைக் காட்சி படப்பிடிப்பில் விபத்து: பிரபல நடிகர் படுகாயம்!

சண்டைக் காட்சி படப்பிடிப்பில் விபத்து: பிரபல நடிகர் படுகாயம்!

சண்டைக்காட்சி படமாக்கப்பட்டபோது ஏற்பட்ட திடீர் விபத்தில் பிரபல நடிகர் படுகாயமடைந்தார்.

பிரபல மலையாள நடிகர் ஆசிப் அலி. மலையாளத்தில் சால்ட் ன் பெப்பர், இண்டியன் ருபீ, மல்லு சிங், பேச்சிலர் பார்ட்டி, ரெட் ஒயின், வெள்ளிமூங்கா, வைரஸ் உட்பட சுமார் 60 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் இப்போது ’எ ரஞ்சித் சினிமா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதை நிஷாந்த் சட்டு இயக்கி வருகிறார். இதில் சைஜு குரூப், அன்சன் பால், நமிதா பிரமோத், அஜு வர்கீஸ், ரஞ்சித் பணிக்கர் உட்பட பலர் நடிக்கின்றனர்.

இதன் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி படப்பிடிப்பு, திருவனந்தபுரத்தில் உள்ள வீடு ஒன்றில் நடந்து வந்தது. இன்று காலை, படப்பிடிப்பின்போது எதிர்பாராதவிதமாக நடந்த விபத்தில், நடிகர் ஆசிப் அலி படுகாயமடைந்தார். அவர் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அதிர்ச்சி அடைந்த படக்குழு உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவர்கள் அவரை சில நாட்கள் ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த விபத்து காரணமாக, படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ‘ஆசிப் அலிக்கு எதிர்பாராதவிதமாக காலில் காயம் ஏற்பட்டுள்ளது. பயப்படும்படி ஒன்றும் இல்லை. இப்போது நன்றாக இருக்கிறார்’ என்று படக்குழு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in