காதலியைக் கரம் பிடித்த பிரபல சீரியல் நடிகர்: ரசிகர்கள் வாழ்த்து!

அஸ்வின் கார்த்திக்-கார்த்திகா
அஸ்வின் கார்த்திக்-கார்த்திகா

சின்னத்திரை நடிகர் அஸ்வின் கார்த்திக்கு கடந்த செப்டம்பர் மாதத்தில் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், தற்போது அவருக்குத் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘வானத்தைப் போல’ சீரியலில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துப் பிரபலமானவர் நடிகர் அஸ்வின் கார்த்திக். நடிக்க வருவதற்கு முன்பு இவர் மீடியாவில் தனது பயணத்தைத் தொகுப்பாளராகத் தொடங்கினார்.

அதன் பிறகு பல ஹிட் சீரியல்களில் நடித்திருந்தாலும் ‘வானத்தைப் போல’ சீரியலில் இவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றது. இந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் இவருக்கு மேக்கப் ஆர்டிஸ்ட் கார்த்திகா என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது.

நீண்ட நாள் காதலர்களான இவர்களுக்கு பெற்றோர் சம்மதத்துடன் தற்போது திருமணம் நடந்துள்ளது. ‘உன்னில் என்னைக் காண்கிறேன்’ எனத் தனது திருமண புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அஸ்வின். இந்த தம்பதிக்கு சின்னத்திரை பிரபலங்களும், நடிகர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in