'வாழ்த்துகள் செல்லம்'... நடிகை வரலட்சுமிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நடிகர் ஆர்யா!

வரலட்சுமியுடன் ஆர்யா
வரலட்சுமியுடன் ஆர்யா

நடிகை வரலட்சுமிக்கு மும்பை தொழிலதிபர் நிகோலய் சச்தேவ்விற்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்நிலையில் நடிகை வரலட்சுமிக்கு நடிகர் ஆர்யா தனது சமூக வலைதளத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

'சண்டைக்கோழி 2' படத்தில் வரலட்சுமி
'சண்டைக்கோழி 2' படத்தில் வரலட்சுமி

நடிகை வரலட்சுமி சரத்குமார் 'போடா போடி' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிப்படங்களில் நடித்து வருகிறார். இயக்குநர் பாலா இயக்கிய 'தாரை தப்பட்டை' படத்தில் கரகாட்டக்கலைஞராக மிகச்சிறப்பான முறையில் வரலட்சுமி நடித்திருந்தார். விஷாலின் 'சண்டைக்கோழி 2' படத்தில் வில்லியாக நடித்திருந்த வரலட்சுமி, சமீபத்தில் வெளியான 'ஜெய் ஹனுமான்' படத்தில் நடித்திருந்தார்.

நடிகை வரட்சுமி, தொழிலதிபர் நிகோலய் சச்தேவ் நிச்சயதார்த்தம்
நடிகை வரட்சுமி, தொழிலதிபர் நிகோலய் சச்தேவ் நிச்சயதார்த்தம்

அவருக்கும், மும்பை தொழிலதிபர் நிகோலய் சச்தேவ்விற்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த திருமண நிச்சயதார்த்தம் குறித்த படங்களை நடிகை ராதிகா தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

அதில், ' வரலஷ்மிக்கும் மும்பை தொழிலதிபர் நிகோலய் சச்தேவ்வுக்கும் திருமணம் செய்ய முடிவெடுத்து, மும்பையில் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நிச்சயதார்த்தம் முடித்தோம். விரைவில் திருமண தேதி அறிவிக்கப்படும்' என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் நடிகை வரலட்சுமிக்கு நடிகர் ஆர்யா வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது சமூக வலைதளப்பக்கத்தில்," வாழ்த்துக்கள் செல்லம்" என்று வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அத்துடன் வரலட்சுமியின் நிச்சயதார்த்த புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.நடிகை வரலட்சுமிக்கு ரசிகர்களின் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in