ரஜினிகாந்த்திற்கு வில்லனாகும் அரவிந்த்சாமி?

ரஜினிகாந்த்திற்கு வில்லனாகும் அரவிந்த்சாமி?

நடிகர் ரஜினிகாந்த்திற்கு அரவிந்த்சாமி வில்லனாக நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது 169-வது படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு ‘ஜெயிலர்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு அடுத்து நடிகர் ரஜினிகாந்த் தனது அடுத்த படத்தில் ‘டான்’ இயக்குநர் சிபி சக்ரவர்த்தியுடன் இணைந்து பணியாற்ற இருக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார் எனவும் கூறப்படுகிறது. ஆனால், இது குறித்தான அதிகாரப்பூர்வமான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நாளை மாலை சென்னையில் ‘பொன்னியின் செல்வன் -1’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்க இருக்கிறது. இயக்குநர் மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸூடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்ள இருக்கிறார். இதனால், இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த்தின் 170-வது படம் குறித்தான அறிவிப்பு இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் தான் ரஜினிக்கு வில்லனாக நடிக்க வைக்க அரவிந்த்சாமியிடம் பேச்சு வார்த்தை நடப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் 1991-ல் வெளியான ‘தளபதி’ படத்தில் அரவிந்த் சாமியும், ரஜினியும் நடித்திருந்தனர். தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் உறுதியானால், ’தளபதி’ படத்திற்கு பிறகு அவர்கள் இணைய இருக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in