சூர்யா விலகிய நிலையில் ’வணங்கான்’ படத்தில் அருண்விஜய்?

சூர்யா விலகிய நிலையில் ’வணங்கான்’ படத்தில் அருண்விஜய்?

’வணங்கான்’ படத்தில் நடிகர் சூர்யா விலகிய நிலையில் அதற்கு பதில் அருண்விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடந்து இருக்கிறது.

பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்க ஒப்பந்தமான படம் ‘வணங்கான்’. படத்தின் முதல் பார்வை மற்றும் படத்தலைப்பு வெளியான நிலையில், முதல் கட்டப்படப்பிடிப்பும் சிறிது நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்தது. படத்தில் நடிப்பது மட்டுமல்லாது சூர்யா அந்தப் படத்தைத் தயாரிக்கவும் செய்தார். அடுத்தக் கட்டப்படப்பிடிப்பு நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையில் கருத்து மோதல் என்ற செய்தி வெளியானது.

அதன் பிறகு நடிகர் சூர்யா அதிகாரப்பூர்வமாக ‘வணங்கான்’ படத்தில் இருந்து நடிகராகவும், தயாரிப்பாளராகவும் விலகுவதாக அறிவித்தார். சூர்யா விலகினாலும், ‘வணங்கான்’ படம் தொடர்ந்து நடக்கும் எனவும் பாலா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சூர்யாவின் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் அருண்விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ‘வணங்கான்’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் வருகிற பிப்ரவரி மாதத்தில் இருந்து தொடங்கும் எனவும் சொல்லப்படுகிறது. இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம். தகவல் உறுதியானால் பாலாவுடன் அருண்விஜய் இணைவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in