`இயக்குநர் ஹரி கண்டிப்பான மாஸ்டர்’: அருண் விஜய்

`இயக்குநர் ஹரி கண்டிப்பான மாஸ்டர்’: அருண் விஜய்
இயக்குநர் ஹரியுடன் அருண் விஜய்

``இயக்குநர் ஹரி கண்டிப்பான மாஸ்டர்'' என்று நடிகர் அருண் விஜய் கூறினார்.

ஹரி இயக்கத்தில், அருண் விஜய் ஹீரோவாக நடிக்கும் படம், 'யானை'. பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, யோகிபாபு, ராதிகா , கருடா ராம், ராஜேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். டிரம்ஸ்டிக் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. ஜூன் 17-ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது.

யானை டிரெய்லர் வெளியீட்டு விழா
யானை டிரெய்லர் வெளியீட்டு விழா

இதில் நடிகர் அருண் விஜய் பேசுகையில், ``நானும், இயக்குநர் ஹரியும் நீண்ட நாளாக இணைந்து பணியாற்ற விரும்பினோம். இவ்வளவு பெரிய பொருட்செலவில், பலமான தொழில்நுட்ப கலைஞர்களுடன் படத்தை உருவாக்க பெரிய தயாரிப்பாளர் தேவைப்பட்டார். அப்போது நாங்கள் அணுகிய நபர் சக்தி சார். இந்த படத்தை உருவாக்க பெரிய தைரியம் வேண்டும். சுற்றியுள்ளவரைப் பாதுகாக்கும் ஒரு கதாபாத்திரம் தான், எனது கதாபாத்திரம். இந்த படத்தில் நிறைய சவால்கள் இருந்தன. ரொம்ப நாள் கழித்து, கிராமம் சம்பந்தப்பட்ட படத்தில் நடித்துள்ளேன்.

அருண் விஜய், பிரியா பவானி சங்கர்
அருண் விஜய், பிரியா பவானி சங்கர்

படத்தின் ஆக்‌ஷன் பெரிய சவாலாக இருந்தது. கண்டிப்பாகப் படம் பேசப்படும் . இது ஹரி சார் பாணியில் இருந்து மாறி எடுத்தபடம். படத்தில் நடித்த அனைவரும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர். காமெடி நிறைந்த, பொழுதுபோக்கு திரைப்படம். ஹரி சார் கண்டிப்பான மாஸ்டர். அவருடைய அர்ப்பணிப்பு அபாரமானது'' என்று கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in