தெலுங்கு ஹீரோவை இயக்குகிறார் நடிகர் அர்ஜுன்!

தெலுங்கு ஹீரோவை இயக்குகிறார் நடிகர் அர்ஜுன்!

நடிகர் அர்ஜுன், தெலுங்கு ஹீரோ நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வருகிறார் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன். இப்போது ஹீரோவுக்கு இணையான வேடங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில், ரவிதேஜாவின் 'கில்லாடி' படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இந்நிலையில், அவர் அடுத்து இயக்குநர் அவதாரம் எடுக்கிறார். ஏற்கெனவே, சேவகன், பிரதாப், தாயின் மணிக்கொடு, ஜெய்ஹிந்த் 2 உட்பட பல படங்களை இயக்கியுள்ளார்.

விஷ்வக் சென், அர்ஜுன்
விஷ்வக் சென், அர்ஜுன்

இப்போது அவர் தெலுங்கு ஹீரோ விஷ்வக் சென் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். இவர், வெள்ளிபோமகே, ஹிட், பாகல் உள்பட சில படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்து வெளியான ’அசோக வனம்லோ அர்ஜுன கல்யாணம்’ படம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

நடிகர் அர்ஜுன், விஷ்வக் சென் -ஐ சமீபத்தில் சந்தித்து பேசியுள்ளார். இந்தப் படத்தில் தனது மகள் ஐஸ்வர்யாவை நாயகியாக நடிக்க வைக்க அவர் முடிவு செய்துள்ளார். இந்தப் படத்தை தமிழ், தெலுங்கில் உருவாக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஐஸ்வர்யா அர்ஜுன்
ஐஸ்வர்யா அர்ஜுன்

நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன், விஷாலின் பட்டத்து யானை படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். அடுத்து தமிழ், கன்னடத்தில் உருவான ’சொல்லிவிடவா’ என்ற படத்தில் நடித்தார். இப்போது தெலுங்கில் அறிமுகமாக இருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in