விஜய் அரசியலுக்கு சீக்கிரம் வந்து விடுவார்... ரசிகர்களை குஷிப்படுத்திய அர்ஜூன்!
O
'லியோ' படத்தின் வெற்றி விழா நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்றிரவு நடைபெற்றது. இதில் நடிகர்கள் விஜய், த்ரிஷா, அர்ஜுன், மிஷ்கின், கெளதம் மேனன், மடோனா எனப் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். இந்த விழாவில் நடிகர் அர்ஜூன் பேசும் பொழுது நடிகர் விஜய் குறித்தும், அவரது அரசியல் பயணம் குறித்தும் 'மங்காத்தா' படத்திற்கும் 'லியோ'வுக்கும் உள்ள தொடர்பு என பல விஷயங்களை மேடையில் பகிர்ந்துள்ளார்.
நடிகர் அர்ஜுன் பேசுகையில், "இந்த விழாவிற்கு வந்துள்ள சூப்பர் ஹீரோ விஜய், சூப்பர் டைரக்டர் லோகேஷ், விஜய் ரசிகர்கள் அனைவருக்கும் வணக்கம். 'லியோ' என்னுடைய கரியரில் வித்தியாசமான படம். இதில் நிறையபேருடன் முதல் முறையாக நடித்துள்ளேன். த்ரிஷாவுடன் 'மங்காத்தா' முதல் படம். 'லியோ' இரண்டாவது படம்.

நான் விஜயை சின்ன பையன்ல இருந்து பார்த்து இருக்கிறேன். கூச்ச சுபாவம் உள்ள மனிதன். ஆனால் இன்று இந்தியாவே வியந்து பார்க்கும் அளவுக்கு முக்கிய நடிகராக உயர்ந்துள்ளார். நடிகர்களில் சிவாஜி கணேசனுக்கு பிறகு நேரம் தவறாமையை விஜயிடம் மட்டுமே பார்க்கிறேன்.
அவர் சொல்ல வேண்டும் என்று நினைப்பதை சைலண்டாக செய்து விடுகிறார். விஜய் அரசியலுக்கு சீக்கிரம் வந்துவிடுவார். அரசியலுக்கு வர மக்களுக்கு நல்லது பண்ணனும்னு எண்ணம் இருந்தாலே போதும், அவரிடம் அது உள்ளது" என்றார்.