வெளியானது பிரபல ஹீரோ மகள் அறிமுகமாகும் படத்தின் அறிவிப்பு!

வெளியானது பிரபல ஹீரோ மகள் அறிமுகமாகும் படத்தின் அறிவிப்பு!

பிரபல ஹீரோவின் மகள் தெலுங்கில் அறிமுகமாகும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வருகிறார் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன். இப்போது ஹீரோவுக்கு இணையான வேடங்களில் நடித்து வருகிறார். ஏற்கெனவே, சேவகன், பிரதாப், தாயின் மணிக்கொடு, ஜெய்ஹிந்த் 2 உட்பட பல படங்களை இயக்கியுள்ள அவர், இப்போது மீண்டும் இயக்குநர் ஆகிறார். தெலுங்கு ஹீரோ விஷ்வக் சென் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார்.

விஷ்வக் சென் நடித்து சமீபத்தில் வெளியான ’அசோகவனம்லோ அர்ஜுன கல்யாணம்’ வரவேற்பைப் பெற்றுள்ளது. இதையடுத்து அர்ஜுன் இயக்கும் படத்தில் அவர் நடிக்கிறார். இதில், தனது மகள் ஐஸ்வர்யாவை, நாயகியாக நடிக்க வைக்கிறார். இதன் மூலம் அவரை தெலுங்கில் அறிமுகப்படுத்துகிறார்.

தெலுங்கு படம் என்றாலும் இதை தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் வெளியிட அர்ஜுன் முடிவு செய்துள்ளார். இந்தப் படம் பற்றிய அறிவிப்பு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் விரைவில் படப்பிடிப்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ஜெகபதி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in