
நடிகை ஐஸ்வர்யா- நடிகர் உமாபதி திருமண நிச்சயதார்த்தம் எங்கே நடக்க இருக்கிறது என்பது குறித்தானத் தகவல் வெளியாகியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவும், தம்பி ராமைய்யாவின் மகன் உமாபதியும் காதலித்ததை தொடர்ந்து, இவர்களுக்குத் திருமணம் செய்து வைக்க இரு வீட்டு பெற்றோரும் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியானது. இதை தொடர்ந்து, தம்பி ராமைய்யாவும் இந்த தகவலை பேட்டி ஒன்றில் உறுதி செய்தார். நடிகர் அர்ஜூன் தொகுத்து வழங்கிய 'சர்வைவர்' நிகழ்ச்சியில் உமாபதி போட்டியாளராகக் களமிறங்கினார்.
இந்த நிகழ்ச்சி மூலம்தான் உமாபதிக்கும் ஐஸ்வர்யாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறியதாக கூறப்படுகிறது. நவம்பர் மாதம் திருமண நிச்சயம் நடக்க இருக்கிறது என முன்பு தம்பி ராமையா தெரிவித்திருந்த நிலையில், நடிகர் அர்ஜுன் சென்னையில் கட்டியுள்ள ஆஞ்சநேயர் கோயிலில் தம்பி ராமையா குடும்பமும், அர்ஜுனின் குடும்பமும் சந்தித்து இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர்.
திருமணம் தைமாதம் நடைபெற இருக்கிறது. நிச்சயதார்த்தம் குறித்தானத் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் விசேஷத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்காக ரசிகர்களும், பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.