`என்னால் தடுக்க முடியவில்லை; அழுகை வந்தது'- நடிகர் மீது இளம் பெண் பாலியல் புகார்

`என்னால் தடுக்க முடியவில்லை; அழுகை வந்தது'- நடிகர் மீது இளம் பெண் பாலியல் புகார்
அனீஷ் மேனன்

நடிப்புப் பயிற்சி என்ற பெயரில் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக நடிகர் மீது இளம் பெண் ஒருவர் சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ள மீடூ புகார் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரபல மலையாள நடிகர் அனீஷ் மேனன். இவர் தமிழில், தீக்குளிக்கும் பச்சை மரம், நம்ம கிராமம் படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் த்ரிஷ்யம், த்ரிஷ்யம் 2, சூடானி ஃபிரம் நைஜீரியா, லூசிஃபர், ஒரு அடார் லவ் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் சில வருடங்களுக்கு முன் மோனோ ஆக்டிங் பயிற்சி வகுப்பு நடத்தி வந்துள்ளார். அப்போது தனக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாக இளம் பெண் ஒருவர் மீடு புகார் கூறியுள்ளார்.

அனீஷ் மேனன்
அனீஷ் மேனன்

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில், ``மோனோ ஆக்டிங் வகுப்புக்காக அவரிடம் நான் சென்றேன். முதலில் என் கன்னத்தைப் பிடித்து பாசத்தை வெளிப்படுத்தினார். பின் மற்ற உடல் பகுதிகளையும் தொட ஆரம்பித்தார். இது சங்கடமாக இருந்தது. இதனால், பயிற்சிக்கு துணைக்கு வருமாறு அம்மாவை அழைத்தேன். அது அனீஷுக்கு தர்மசங்கடமாக இருக்கும் என்று கூறி வரவில்லை. உடலைத் தொடுவது பயிற்சியின் ஒரு பகுதி என்று என் பெற்றோரையும் அவர் நம்ப வைத்தார். பிறகு அதிக உரிமை எடுத்துக்கொண்டு பாலியல் தொல்லைக் கொடுக்க ஆரம்பித்தார். பயந்தேன்.

ஒரு முறை காதல் எக்ஸ்பிரஷன்கள் சரியாக வரவில்லை என்று சொல்லிக் கொடுத்தார். அப்போது என் கைகளை நன்றாக பிடித்துக்கொண்டு கழுத்தில் முத்தம் கொடுத்தார். பின்னர் சுவரில் சாய்த்து வலுக்கட்டாயமாக முத்தமிட்டார். என்னால் தடுக்க முடியவில்லை. அழுகை வந்தது. அப்போது திடீரென என் உதட்டைக் கடித்தார். அழுகையை அடக்க முடியாமல் என் பெற்றோருக்கு போன் செய்தேன். அவர்கள் என்னவென்று கேட்டபோது, வயிறு வலிக்கிறது என்று சொன்னேன். அவர்கள் வந்தார்கள். இனி மோனோ ஆக்டிங் வேண்டாம் என்று அவர்களிடம் சொன்னேன்.

அனீஷ் மேனன்
அனீஷ் மேனன்

ஏன் அனீஷ் ஏதும் செய்தாரா? என்று கேட்டனர். நான் இல்லை என்று சொன்னேன். அப்போது வரை அங்கு இருந்தவர், என் பெற்றோர் வந்ததும் ஓடிவிட்டார். என்னைப் போல பலர் அவரால் பாதிக்கப்பட்டிருக்கலாம். நான் எழுதியதால் இன்னும் சிலர் தைரியமாக புகார் கூற முன் வருவார்கள் என்று நினைத்தே இதை எழுதுகிறேன். அந்த நேரத்தில் என் பெற்றோரும் எனக்கு ஆதரவாக இல்லை என்பதுதான் வருத்தமான விஷயம்'' என்று கூறியுள்ளார்.

இந்த மீடு புகார், கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.