மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் மரணம்: திரையுலகினர் இரங்கல்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் மரணம்: திரையுலகினர் இரங்கல்

உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல மலையாள நடிகர் டி.பிலிப் காலமானார். அவருக்குத் திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரபல மலையாள நடிகர் டேனியல் பிலிப் என்ற டி.பிலிப். ‘கோட்டயம் குஞ்சச்சன்’, ‘வேட்டன்’, ‘அர்த்தம்’, ‘பழசிராஜா’ உட்பட சுமார் 50-க்கும் மேற்பட்ட படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் இவர். சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக முதுமை காரணமாக உடல் நலமில்லாமல் இருந்தார். இதற்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவருக்கு வயது 79. வெளிநாட்டில் உள்ள மகன் வந்தபிறகு அவருடைய இறுதிச் சடங்கு நடைபெற இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in