அயோத்தியில் கோடிக்கணக்கில் பணம் கொட்டி வீட்டுமனை வாங்கிய பாலிவுட் சூப்பர் ஸ்டார்!

நடிகர் அமிதாப் பச்சன்
நடிகர் அமிதாப் பச்சன்ட்விட்டர் பிரதர், நான் சொல்வது கேட்கிறதா?: ப்ளூ டிக்கை திரும்ப கேட்ட அமிதாப்!

அயோதி ராமர் கோவிலுக்கான குடமுழுக்கு நெருங்கிவரக்கூடிய வேளையில் அங்கு பாலிவுட் நடிகர் அமிதாபச்சன் பிரமாண்ட வீட்டுமனை வாங்கியுள்ளார்.

அயோத்தி ராமர் கோயில்
அயோத்தி ராமர் கோயில்

அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் குடமுழுக்கு விழா ஜனவரி 22 அன்று பிரம்மாண்டமாக நடக்க உள்ளது. இதற்காக பாலிவுட் நடிகர்கள் அமிதாப்பச்சன், அலியா பட், ரன்பீர், ரஜினிகாந்த், துர்கா ஸ்டாலின் என பல திரை பிரபலங்களுக்கும், முக்கிய அரசியல் தலைவர்களுக்கும் நாடு முழுவதும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற ஒரு சூழ்நிலையில் தான் நடிகர் அமிதாபச்சன் அயோத்தி ராமர் கோவில் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் பிரம்மாண்ட வீட்டு மனை ஒன்றை வாங்கியுள்ளார்.

அமிதாப் பச்சன்
அமிதாப் பச்சன்

சுமார் 10,000 சதுர அடி கொண்ட இந்த நிலத்தின் மதிப்பு ரூ. 14.5 கோடி எனவும் சொல்லப்படுகிறது. மும்பையைச் சேர்ந்த ஹவுஸ் ஆஃப் அபிநந்தன் லோத்தா நிறுவனம் அயோத்தி ராமர் கோவிலுக்கு அருகே 51 ஏக்கர் பரப்பளவில் வீட்டு மனை திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இந்த இடத்தில் ஐந்து நட்சத்திர ஹோட்டலுடன் மிகப் பிரம்மாண்டமான வீடுகள் கட்டப்பட உள்ளன. வருகிற 2028 ஆம் ஆண்டுக்குள் இவை முடிக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில்தாம், நடிகர் அமிதாப் பச்சன் முதல் ஆளாக இங்கு 14.5 கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தை வாங்கியுள்ளார். அயோத்தி ராமர் கோவிலுக்கு அருகிலேயே நடிகர் அமிதாப் பச்சன் பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் வாங்கியிருப்பது பாலிவுட்டில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in