உங்களுடன் என்னை ஒப்பிட முடியாது... ரஜினி குறித்து உருகிய அமிதாப்!

அமிதாப்- ரஜினி
அமிதாப்- ரஜினி

உங்களுடன் என்னை ஒப்பிட முடியாது என நடிகர் ரஜினிகாந்த் குறித்து நடிகர் அமிதாப் பச்சன் நெகிழ்ச்சியாகப் பகிர்ந்துள்ளார்.

'ஜெயிலர்', 'லால் சலாம்' படங்களுக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் தற்போது 'தலைவர் 170' படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தை 'ஜெய்பீம்' புகழ் ஞானவேல் இயக்குகிறார். இந்தப் படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாபச்சன், மஞ்சு வாரியார், துஷாரா விஜயன் உள்ளிட்டப் பல நடிகர்கள் நடிக்கின்றனர். இதன் முதல்கட்டப் படப்பிடிப்பு கேரளா, திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.

பின்பு, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய இடங்களில் நடந்தது. இந்த பகுதிகளில் ரசிகர்கள் ரஜினிகாந்திற்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பல வருடங்களுக்கு பிறகு கன்னியாகுமரி வந்துள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களுடன் நெகிழ்ச்சியாக பகிர்ந்த வீடியோவும் இணையத்தில் வைரலானது. கிட்டத்தட்ட 33 வருடங்களுக்குப் பிறகு ரஜினியுடன் அமிதாப் இணைந்து நடிக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது.

33 வருடங்கள் கழித்து அமிதாப்புடன் மீண்டும் இணைந்து நடிப்பதால் என் இதயம் மகிழ்ச்சியில் துள்ளுகிறது என ரஜினிகாந்த் நேற்று ட்விட் செய்திருக்க இதற்கு அமிதாப்பச்சன் ரிப்ளை கொடுத்திருக்கிறார். அவருடைய ட்விட்டில் தெரிவித்திருப்பதாவது, ‘நீங்கள் எப்போதும் தன்மையானவர்! படத்தின் தலைப்பைப் பாருங்கள் ‘தலைவர் 170’. தலைவர் என்றால் வழிநடத்துபவர், சீஃப். அதில் ஏதும் சந்தேகம் இருக்கிறதா? உங்களுடன் என்னை ஒப்பிடவே முடியாது. உங்களுடன் மீண்டும் இணைந்து நடிப்பது எனக்குத்தான் பெருமை’ என அமிதாப் கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in