ரஹ்மானுக்காக நடிகர் அமிதாப்பச்சன் எடுத்த ரிஸ்க்!

அமிதாப்பச்சன்
அமிதாப்பச்சன்

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பிஸியாக நடித்து வரக்கூடிய ரஹ்மான் தற்பொழுது 'கண்பத்' என்ற படம் மூலம் பாலிவுட்டிலும் நுழைந்துள்ளார். இந்தப் படம் குறித்து அவர் பகிர்ந்துள்ளார்.

அவர் பேசியிருப்பதாவது, "90களின் துவக்கத்திலேயே பாலிவுட்டில் நடிக்கும் வாய்ப்புகள் தேடி வந்தன. ஆனால் அந்த சமயத்தில் இங்கே தமிழ், மலையாளத்தில் பிசியாக நடித்து வந்தேன் இப்போது மீண்டும் அதற்கான நேரம் வந்திருக்கிறது. 'கண்பத்' படத்தின் மூலம் பாலிவுட்டில் நுழைந்துள்ளேன். இந்தப் படத்தின் கதையை சொன்னபோது இதில் அமிதாப் பச்சன் நடிக்கிறார் என்றும் அவரது மகனாக நீங்கள் நடிக்கிறீர்கள் என்று சொன்னதும் மறு யோசனை இன்றி உடனடியாக சம்மதம் சொல்லிவிட்டேன்.

நடிகர் ரஹ்மான்
நடிகர் ரஹ்மான்

நான் சிறுவயதிலிருந்தே பார்த்து அவரது ஸ்டைலை ரசித்து வளர்ந்தவன். அமிதாப்பச்சன் என்னைப் பற்றி சில விஷயங்களை தெரிந்து வைத்திருந்தார். குறிப்பாக தொண்ணூறுகளில் நான் நடித்த 'குற்றப்பத்திரிகை' திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது குறித்து என்னிடம் கேட்டு அந்த படம் ரிலீஸ் ஆகிவிட்டதா என தெரிந்து கொண்டார். அந்தப்படத்தின் ரிலீஸுக்காக அப்போது அவரும் தன்னுடைய பங்கிற்கு முயற்சி செய்தார் என்பதையும் தெரிந்து ஆச்சரியம் அடைந்தேன். எனக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நாகேஷ், நசீர், மது போன்ற ஜாம்பவான்களுடன் நடிக்கும் பாக்கியம் ஏற்கெனவே அமைந்தது, அந்த வரிசையில் இப்போது அமிதாப் பச்சனுடனும் நடித்து விட்டேன்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in