தேசிய விருது பெற டெல்லி புறப்பட்டார் அல்லு அர்ஜுன் - வைரல் போட்டோ!

நடிகர் அல்லு அர்ஜூன்...
நடிகர் அல்லு அர்ஜூன்...

தேசிய விருது பெற நடிகர் அல்லு அர்ஜூன் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.

நாட்டின் 69 வது தேசிய விருதுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது. இதில் சிறந்த நடிகருக்கான விருதை 'புஷ்பா' படத்திற்காக அல்லு அர்ஜுன் பெற்றார். தேசிய விருதுகள் அறிவிக்க ஆரம்பிக்கப்பட்டதில், முதல் தேசிய விருது பெரும் தெலுங்கு நடிகர் என்ற பெருமையை அல்லு அர்ஜூன் பெற்றுள்ளார்.

மனைவியுடன் அல்லு அர்ஜூன்...
மனைவியுடன் அல்லு அர்ஜூன்...

'புஷ்பா' படத்திற்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டதும் 'புஷ்பா 2' படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இன்னும் அதிகரித்துள்ளது. தற்போது, 'புஷ்பா2' படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று இருக்கும் நிலையில், படப்பிடிப்பு தளத்தில் இருந்து வீடியோ, புகைப்படம் ஆகியவற்றை படக்குழு வெளியிட்டு வருகிறது.

சமீபத்தில் அல்லு அர்ஜூன் பிறந்த நாளுக்கு வெளியான 'வேர் ஈஸ் புஷ்பா?' என்ற கிளிம்ப்ஸூம் கவனம் ஈர்த்தது. இந்த நிலையில் தேசிய விருது 'புஷ்பா' படத்திற்காக அல்லு அர்ஜூனுக்கு அறிவிக்கப்பட்டு ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில், நாளை மாலை தேசிய விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறுகிறது. இதற்காக அல்லு அர்ஜுன் தன் மனைவியுடன் தற்போது டெல்லி புறப்பட்டுள்ளார். விமான நிலையத்தில் மனைவியுடன் கிளம்பும் புகைப்படம் தற்போது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in