நடிகர் அல்லு அர்ஜூன்...
நடிகர் அல்லு அர்ஜூன்...

தேசிய விருது: கண்கலங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அல்லு அர்ஜூன்... வைரல் வீடியோ!

சிறந்த நடிகருக்கான தேசிய விருதை நடிகர் அல்லு அர்ஜூன் வென்றார்.

டெல்லியில் இன்று மாலை 69வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. சிறந்த படங்கள், நடிக, நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வருகிறது. நாட்டில் பல்வேறு மொழிகளில் வெளியான திரைப்படங்களில் சிறந்தவற்றை தேர்வு செய்து விருதுகள் வழங்கப்படுகிறது.

அதன்படி சிறந்த நடிகருக்கான விருதை ‘புஷ்பா1’ படத்திற்காக நடிகர் அல்லு அர்ஜூன் வென்றார். விருது தனக்கு அறிவிக்கப்பட்டதும் நடிகர் அல்லு அர்ஜூன் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

விருது அறிவிக்கப்பட்டதும் அல்லு அர்ஜூன் குடும்பத்தார் அவரைக் கட்டிப்பிடித்து தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். அல்லு அர்ஜூனும் கண்கலங்கி நிற்கும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தப் படத்திற்காக அல்லு அர்ஜூன் விருது வெல்வார் என ரசிகர்கள் காலையில் இருந்தே எதிர்பார்த்து இருந்தனர். ‘புஷ்பா1’ படத்தின் பாடல்களுக்காக தேவி ஸ்ரீ பிரசாத்துக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in