ஆரம்பமே அள்ளுது... 'புஷ்பா 2’ போஸ்டர் வெளியிட்டு ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழுவினர்!

’புஷ்பா2’
’புஷ்பா2’

’புஷ்பா2’ படத்தின் புது போஸ்டரை வெளியிட்டு, ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா, பஹத் பாசில் உள்ளிட்டப் பலரும் நடித்திருந்த ’புஷ்பா’ படம் பான் இந்தியா அளவில் வசூலிலும் பெரும் வெற்றிப் பெற்று, தேசிய விருதுகளைக் குவித்தது.

இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில் நடிகர் அல்லு அர்ஜுன் தன் வீட்டில் இருந்து ’புஷ்பா2’ படப்பிடிப்புத் தளத்திற்குச் செல்லும் வரையில், தொடர் வீடியோவாக பதிவு செய்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கு நன்றி கூறினார்.

’புஷ்பா2’
’புஷ்பா2’

இந்நிலையில், ‘புஷ்பா2’ படத்தின் புதிய போஸ்டருடன், படத்தின் ரிலீஸ் தேதியும் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 15, 2024 அன்று படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் முதல் லுக் போஸ்டர், கிளிம்ப்ஸ் என ஆரம்பமே எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. தேசிய விருதுகளை வென்ற பின்னர், ‘புஷ்பா2’ படத்தின் பிசினஸ் ஆயிரம் கோடிக்கு விரிவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in