”மறந்துடாதீங்க... அடுத்த அஞ்சு வருஷ வாழ்க்கையைத் தீர்மானிக்கும்” நடிகர் அல்லு அர்ஜூன் பேட்டி!

நடிகர் அல்லு அர்ஜூன்
நடிகர் அல்லு அர்ஜூன்

”இன்று நாம் போடும் ஓட்டு அடுத்த வரும் ஐந்து வருடங்களுக்கு முக்கியமானது. மேலும், நான் எந்தக் கட்சியையும் சாராதவன்” என்று நடிகர் அல்லு அர்ஜுன் வாக்களித்தப் பின் பேட்டியளித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் நான்காவது கட்டத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. ஆந்திரா, தெலங்கானா, ஒடிஸா உள்ளிட்ட 9 மாநிலங்களில் இன்று காலை முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் இன்று காலை வாக்களித்தார்.

வாக்களித்தப் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை விளக்கிப் பேசினார். “இந்த நாட்டின் குடிமகன்களாக நாம் அனைவருக்கும் இன்று முக்கியமான நாள். இன்று வெப்பம் அதிகமாக இருக்கிறது தான். அதை யோசித்து நாம் வாக்களிக்க வராமல் இருக்கக் கூடாது. ஏனெனில், இன்று நாம் அளிக்கும் வாக்குதான் நம் வாழ்வின் அடுத்த ஐந்து வருடங்களைத் தீர்மானிக்கும்” என்றார்.

நேற்று முன்தினம் ஆந்திர மாநிலம், நந்தியாளா தொகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் ஷில்பா ரவிசந்திரன் கிஷோர் ரெட்டிக்கு ஆதரவாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார் அல்லு அர்ஜூன். இதனால், ”அவரிடம் அரசியல் கட்சியில் இணைந்துவிட்டீர்களா?” என்று கேட்கப்பட்டது.

ஷில்பா ரவிசந்திரன் கிஷோர் ரெட்டி- அல்லு அர்ஜூன்
ஷில்பா ரவிசந்திரன் கிஷோர் ரெட்டி- அல்லு அர்ஜூன்

அதற்கு அவர், “நான் எந்தக் கட்சியிலும் இணையவில்லை. என் நண்பரைக் காணத்தான் அங்கு சென்றேன். அதனால், நான் கட்சியில் இணைந்துவிட்டேன் என்று அர்த்தமில்லை. நான் எல்லாக் கட்சிகளுக்கும் நடுநிலையானவன்!” என்றார்.

மேலும், எம்எல்ஏ அலுவலகம் முன்பு கூடிய கூட்டத்திற்கு முன் அனுமதியின்றி அல்லு அர்ஜுனை அழைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் தேர்தல் விதிகளை மீறியதற்காக அவர்கள் இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in