முதல் முறையாக தென்னிந்திய நடிகருக்கு கவுரவம்... துபாய் மியூசியத்தில் அல்லு அர்ஜூனுக்கு மெழுகுச்சிலை!

தனது மெழுகு சிலையுடன் நடிகர் அல்லு அர்ஜூன்...
தனது மெழுகு சிலையுடன் நடிகர் அல்லு அர்ஜூன்...

நடிகர் அல்லு அர்ஜூனுக்கான மெழுகுச் சிலை, துபாய் மேடம் டுசாட்ஸ் மியூசியத்தில் நேற்று திறக்கப்பட்டுள்ளது. 21 வருடங்களுக்கு முன்னால் சினிமாவில் தனது பயணம் ஆரம்பித்த நாள் அன்றே இந்த விஷயம் நடந்திருப்பது தனக்கு நெகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியுள்ளார் அல்லு அர்ஜூன்.

’ஐகான் ஸ்டார்’ என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் அல்லு அர்ஜூனின் மெழுகுச்சிலை துபாயில் உள்ள மேடம் டுசாட்ஸ் மியூசியத்தில் திறக்கப்பட்டுள்ளது. இங்கு மெழுகுச் சிலை அமையப் பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் அல்லு அர்ஜூன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விஷயம் குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ”எனக்கு இது ஸ்பெஷலான நாள்! என்னுடைய முதல் படம் ‘கங்கோத்ரி’ 2003-ம் ஆண்டு இதே நாளில் ரிலீஸ் ஆனது. இன்று அதே நாளில் என்னுடைய மெழுகுச்சிலை திறக்கப்படுகிறது. என்னை நானே கண்ணாடியில் பார்ப்பது போல அற்புதமாக இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. எனக்கு ஒரு மெழுகுச் சிலை வைத்திருக்கிறார்கள் என்று என்னால் நம்ப முடியவில்லை! என் ரசிகர்களுக்கும் திரைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கும் நன்றி” என்றார்.

சிவப்பு நிற ஜாக்கெட்டில் அல்லு அர்ஜூனின் ‘அலா வைகுந்தபுரமுலு’ படத்தில் இருந்து நடன அசைவை கருப்பொருளாகக் கொண்டு இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. அல்லு அர்ஜுனின் மெழுகுச் சிலையை உருவாக்க, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கிட்டத்தட்ட 200-க்கும் மேற்பட்ட அளவீடுகள் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று நடந்த இந்த மெழுகுச் சிலை திறப்பு நிகழ்வில் அல்லு அர்ஜூனின் குடும்பத்தினரும் கலந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...    

வரலாற்றில் உச்சம்... ரூ.51,000யைக் கடந்தது சவரன் விலை... ஒரே நாளில் ரூ.1,120 உயர்வு!

தேவாலய ஆராதனைக்குச் சென்றபோது ஆற்றுக்குள் கவிழ்ந்த பேருந்து... 45 பேர் பலியான பரிதாபம்!

அதிர்ச்சி... சென்னை தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!

பள்ளி இறுதித்தேர்வு தேதியில் திடீர் மாற்றம்... ரமலான் பண்டிகையை முன்னிட்டு நடவடிக்கை!

அடுத்த தோனி இவர் தான்... தோனியே புகழ்ந்த அந்த நபர் இவரா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in