முதல் தெலுங்கு திரைப்பட நடிகர்... டுசாட்ஸ் மியூசியத்தில் அல்லு அர்ஜூனுக்கு மெழுகு சிலை! ரசிகர்கள் கொண்டாட்டம்!

நடிகர் அல்லு அர்ஜூன்
நடிகர் அல்லு அர்ஜூன்

துபாயில் உள்ள மேடம் டுசாட்ஸ் மியூசியத்தில் மெழுகு சிலை வைக்கப்படும் முதல் தெலுங்கு நடிகர் என்ற பெருமையை நடிகர் அல்லு அர்ஜுன் பெற்றார்.

துபாயில் உள்ள மேடம் டுசாட்ஸ் மியூசியத்தில் இந்த வருட இறுதியில் நடிகர் அல்லு அர்ஜூனின் மெழுகு சிலை திறக்கப்பட உள்ளது. இந்த சிறப்பைப் பெறும் முதல் தெலுங்கு நடிகர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று மெழுகு சிலைக்கான அளவீடுகளைக் கொடுத்துள்ளார். இதற்கான வீடியோவும் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

’புஷ்பா 1: தி ரைஸ்’ திரைப்படத்திற்காக நடிகர் அல்லு அர்ஜூன் இந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார். தற்போது புஷ்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகமான ’புஷ்பா 2: தி ரூல்’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்தத் திரைப்படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15, 2024 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in