அஜித்தை விட விஜய்க்குத்தான் மாஸ்... அஜ்மல் கொடுத்த அப்டேட்!

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

அஜித்தின் ‘மங்காத்தா’ படத்தை விட விஜயின் ‘GOAT' படம் சிறப்பாக வந்திருப்பதாக இதில் நடித்துள்ள நடிகர் அஜ்மல் பேசியுள்ளார். இந்த விஷயம் விஜய் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘GOAT' படம் செப்டம்பர் 5 வெளியாக இருக்கிறது. இதனால், படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் மற்றும் புரோமோஷன் பணிகளை படக்குழு விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது. இதில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் ‘விசில் போடு’ என்ற பாடல் கடந்த 14-ம் தேதி வெளியானது. இந்தப் பாடல் பெரிதாக வரவேற்பைப் பெறாமல் போகவே, யுவனை நெட்டிசன்கள் வறுத்தெடுத்தார்கள்.

இந்தப் படத்தில் விஜய் அப்பா- மகன் என இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இதில் மகன் விஜயின் ஸ்காவாட்டில் நடிகர்கள் பிரபுதேவா, பிரஷாந்த், அஜ்மல் மூன்று பேரும் இருக்கிறார்கள். இதில் அஜ்மல்தான் ‘GOAT' படம் குறித்து மாஸ் அப்டேட் கொடுத்திருக்கிறார்.

நேற்று கல்ச்சுரல் நிகழ்வு ஒன்றில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் அஜ்மல். அப்போது பேசிய அவர், “ ‘GOAT' கதை நான்கு நண்பர்கள் கொண்ட அதிரடி ஆக்‌ஷன் பிளாக் கதையாக உருவாகி இருக்கிறது. ’மங்காத்தா’ படத்தை விட இந்தப் படம் நிச்சயம் சிறப்பாக இருக்கும்” என்றார். நடிகர் அஜ்மல் இதற்கு முன்பு நடித்த ‘கோ’, ‘அஞ்சாதே’ படங்களில் நெகட்டிவ் ஷேடில்தான் நடித்திருந்தார்.

 'GOAT'
'GOAT'

இந்தப் படத்திலும் அதேபோன்று நண்பர்கள் கூட்டத்தில் ‘கருப்பு ஆடு’ அதாவது வில்லன் இவர்தானா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏனெனில் ‘GOAT' எனத் தலைப்பு வைத்திருக்கும் போது கதையில் கருப்பு ஆடு நிச்சயம் வெங்கட்பிரபு வைத்திருப்பார் எனவும் அது அஜ்மல்தான் எனவும் சொல்கின்றனர்.

’மங்காத்தா’ படத்தில் அஜித் டீமில் வரும் பிரேம்ஜி, வைபவ், மகத், அஸ்வின் அனைவரது கதாபாத்திரத்தையும் சிறப்பாக கையாண்டிருப்பார் வெங்கட்பிரபு. அதுபோல, ‘GOAT' படத்தில் அஜித்தை விட விஜய்க்கு மாஸ் செய்திருப்பார் எனக் கூறி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

#BREAKING: பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது நடடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

நடுரோட்டில் திமுக நிர்வாகி படுகொலை... விருதுநகரில் பரபரப்பு!

குழந்தை பிறப்பு பிரச்சினைக்கு திரவுபதி உதாரணம்: சர்ச்சையில் சிக்கிய அஜித்பவார்!

ரவுண்டு கட்டிய விஜய் ரசிகர்கள்... இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்த யுவன் ஷங்கர் ராஜா?!

மோசடி வழக்கு: நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவின் ரூ.97 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in