நடிகர் அஜித்தின் 'துணிவு' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகர் அஜித்தின் 'துணிவு' பட  ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்திற்கு 'துணிவு' என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் தற்போது தனது 61-வது படத்தில் நடித்துவருகிறார். ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்தில் மஞ்சு வாரியர், சார்பட்டா பரம்பரை புகழ் ஜான் கோக்கன், வீரா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படத்தில் அஜித் கல்லூரி பேராசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

ஹைதராபாத், சென்னை, விசாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்தது. தற்போது படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடக்கவிருப்பதாகவும், ஒரேகட்டமாக படத்தை முழுவதுமாக முடித்துவிட படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தச் சூழலில் படத்துக்கு தலைப்பு என்னவாக இருக்குமென்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர். மேலும் 'துணிவே துணை' என்று படத்துக்கு பெயரிடப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் இப்படத்திற்கு 'துணிவு' என்று இன்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. இது அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஹெச்.வினோத்துடன் 3-வது முறையாக இந்தப் படத்தில் அஜித் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரூபாய் நோட்டு வடிவத்தில் வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், கையில் துப்பாக்கியுடன் அஜித் காட்சி தரும் ஸ்டில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in