துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தெறிக்கவிட்ட நடிகர் அஜித் `டீம்': 4 தங்கம், 2 வெண்கலப் பதக்கம் வென்று சாதித்தது!

துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தெறிக்கவிட்ட நடிகர் அஜித் `டீம்': 4 தங்கம், 2 வெண்கலப் பதக்கம் வென்று சாதித்தது!

திருச்சியில் நடந்து வரும் மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் நடிகர் அஜித் அணி 4 தங்கம், 2 வெண்கலம் வென்று அசத்தியுள்ளது.

திருச்சி கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் செயல்பட்டு வரும் ரைபிள் கிளப்பில் 47-வது மாநில துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி, பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கிச் சுடும் போட்டி கடந்த 25-ம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 1,300 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதில் 16, 19, 21 ஆகிய வயதுக்கு உட்பட்ட பிரிவினருக்கும், 21 முதல் 45 வயது, 45 முதல் 60 வயது மற்றும் 60 வயதுக்கு மேல் உள்ள பிரிவினருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. பிஸ்டல் துப்பாக்கிச் சுடுவதற்கான போட்டி கடந்த 28-ம் தேதி வரை நடைபெற்றது. நேற்று ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டி வரும் 31-ம் தேதி வரை நடைபெறுகிறது.

திரைப்பட நடிகர் அஜித்தும் ஒரு சிறந்த துப்பாக்கிச் சுடும் வீரர் என்பதால் இதில் கலந்து கொண்டார். இந்தப் போட்டியில் அஜித் அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. ஸ்டாண்டர்டு பிஸ்டல் மாஸ்டர், 50 மீட்டர் பிரீ பிஸ்டல் மாஸ்டர் உள்ளிட்ட பிரிவுகளில் 5 தங்கம், 2 வெண்கலம் பதற்றம் வென்றுள்ளது அஜித் அணி. வெற்றி பெற்றவர்களுக்கு நாளை பரிசு வழங்கப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in